Header Ads



1956 இன் பின் மிக மோசமான சகாலநிலை சீர்கேடு இது, ஆனால் தேர்தலை ஒத்திவைக்க முடியாது

-Gtn-

தேர்லை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 1.1 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

1956ம் ஆண்டின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான சகாலநிலை சீர்கேடு இதுவெனக் குறிப்பிட்டுள்ளார். சில தரப்பினர் விடுக்கும் கோரிக்கைகளுக்கு அமைவாக ஜனாதிபதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில தினங்களில் சீரற்ற காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் கிரமமான முறையில் குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் தேர்தலை எப்போது நடாத்துவது என்பது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கே உண்டு என அவர் தெரிவித்துள்ளார். மழை வெள்ளமோ அல்லது மண்சரிவோ ஜனாதிபதி தேர்தல் செயன்முறையை தற்போதைக்குப் பாதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.