ஒசாமா பின்லேடனின் பொம்மைகளை ஏலத்திற்கு விடும் CIA
ஒசாமா பின்லேடனின் 3 விகார பொம்மைகளை அமெரிக்காவின் உளவு நிறுவனம் சிஐஏ ஆன்லைனில் வரும் 20-ம் தேதி ஏலம் விடுகிறது. இதற்கான ஏலத்தொகை ஆன்லைன் அதிகரித்து வருகிறது.
கடந்த 2005-ம் ஆண்டு ஒசாமாவின் விகார பொம்மைகளை ஜிஐ ஜோ பொம்மை நிறுவனம் தயாரித்து விற்பனை செய்தது. 30 செ.மீ. நீளமும், ரத்த சிவப்பும் கறுப்பும் நிறைந்த முகமும், பச்சைநிற கண்களையும் உடைய இந்த பொம்மைகள் பின்னர் பாகிஸ்தானில் கராச்சி நகருக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஒசாமா பின்லேடன் பிடிபட்டால் எப்படியெல்லாம் சித்ரவதை செய்யப்பட வேண்டும் என்பதை எடுத்து காட்ட, அந்த பொம்மைகளை சிஐஏ உளவு நிறுவனமும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அமெரிக்காவில் ஒசாமாவின் விகார பொம்மைகள் தயாரிப்புக்கு தடை விதிக்கப்பட்டது. ஒசாமா பொம்மைகள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் சிஐஏ வசம் இருந்த ஒசாமாவின் 3 விகார பொம்மைகள் வரும் 20-ம் தேதி ஆன்லைன் மூலம் நேட் டி சான்டர்ஸ் ஏல நிறுவனம் ஏலம் விடுகிறது.இதற்கு ரூ.1.50 லட்சம் குறைந்தபட்ச கேட்பு தொகையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக ஏராளமானவர்கள் ஆன்லைன் மூலம் ஏலத் தொகையை வருவதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

Post a Comment