Header Ads



'தூய்மையான தலைமைத்துவம், காருண்யமான ஆட்சி' - மைத்திரியின் தேர்தல் தொனிப்பொருள் இதுதான்


மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை தனது சொந்த மாவட்டமான பொலனறுவையில் ஆரம்பிக்க உள்ளார்.

அன்றைய தினம் பொலனறுவை கல் விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தூய்மையான தலைமைத்துவம் காருண்யமான ஆட்சி என்ற தலைப்பில் அவரது பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான எதிரணி அரசியல் கட்சிகள், சமய அமைப்புகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட அரசியல் செயற்பாட்டாளர்கள் பலர் இந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனிடையே தேர்தல் பிரசார நடவடிக்கை அலுவலகம் ஒன்றை மைத்திரிபால சிறிசேன இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் திறந்து வைத்தார்.

No comments

Powered by Blogger.