பௌத்த சாசனம் தொடர்பாக நாம் முன் வைத்த யோசனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன - சம்பிக்க ரணவக்க
முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரனவக்க குழுவினர் (20.11.2014) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களுக்குச் சென்றனர்.
முதலில் ஸ்ரீ ததலா மாளிகைக்குச் சென்று வழிபட்டதுடன் பின்னர் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்றனர்.
மல்வத்தை மகாநாயக்கர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்த போது சம்பிக்க ரணவக்கmதெரிவித்ததாவது,
தற்போது நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிபதி முறை மாற்றப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதேபோல் பாராளுமன்றத்திற்கு பொறுப்புச் சொல்லும் அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் முறையில் மாற்றம கொண்டு வருதல்; போன்ற பல்வேறு விடயங்கள் கொண்டு வரப்படுவதாக வாக்குறுதி அளித்த போதும் அவை இன்று மீறப்பட்டுள்ளன.
தனக்குத் தேவையானவற்றை மற்றும் நிறைவேற்றிக் கொள்ளும் அரசியல் நடைமுறையே இன்று காணப் படுகிறது.
பௌத்த சாசனம் மற்றும் விகாரைகள் பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பாக நாம் முன் வைத்த யோசனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி விடயங்களைக் கருத்திற்கொண்ட நாம் அரசுடன் தொடர்ந்து இருப்பதில் பயன் இல்லை என்றதன் காரணமாக அரசைவிட்டு வெளியேறி உள்ளோம் என்றார்.
அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் வண. உடுகம ஸ்ரீ புத்தரகித தேரருடனான சந்திப்பின் போது ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Post a Comment