பலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஸ்பெயின் பாராளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம்
ஸ்பெயின் அரசு பலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கக் கோரி அந்நாட்டு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்பெயின் எதிர்க்கட்சியினரால் கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தில், ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் இதேபோன்ற தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு அளித்து பலஸ்தீனத்தை ஏற்க வேண்டும் என அரசிடம் கோரப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பு கிட்டத்தட்ட ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 319 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்ததோடு எதிராக இரண்டு வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.
இதில், "சர்வதேச சட்டத்தின் கீழ் பலஸ்தீனத்தை ஒரு தேசமாக அங்கீகரிக்க வேண்டும். பலஸ்தீனம், இஸ்ரேல் இரு தேசங்களாக ஒன்றுபட்டு வாழ்வதே ஒரே தீர்வாக இருக்கும்" என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக இதேபோன்ற தீர்மானம் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து பாராளுமன்றங்களில் நிறைவேற்றப் பட்டதோடு பிரான்ஸ் பாராளுமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத் தப்படவுள்ளது. ஸ்வீடன் அரசு கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி பலஸ்தீனத்தை ஒரு நாடாக உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது.
.jpg)
all from allah ,,,masha allah.allarum ok nammada kaattu arabik koottam angeekarikkazu(saudi,egypt,uae,bahrain,oman etc.,)
ReplyDelete