''நானும் நாட்டுக்காக போராட்டம் செய்து, சிறைக்குச் சென்று பல கஷ்டங்கள், அர்ப்பணிப்புகளை செய்தவன்''
நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பு, ஜனநாயகம், இறைமை என்பவற்றில் முக்கிய ஆவணமாகத் திகழும் அரசியலமைப்பில் எவரது தேவைக்காகவும் அவசரம் அவசரமாகத் திருத்தம் ஏற்படுத்த முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
அரசியலமைப்பை அவசரமாக மாற்றுவதற்கு அது ஒரு சஞ்சிகையல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி : நிலையான அரசாங்கம் மூலம் முன்னெடுத்துச் செல்லும் பயணத்தை காலை வாரிவிட முயற்சிப்போருக்கு இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கலகெதரவில் நேற்று கொழும்பு - கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலைக் கான பணிகளை பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்து ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதனையொட்டிய விசேட நிகழ்வு கலகெதர சரத் அமுனுகம விளையாட்டரங் கில் நடைபெற்றதுடன் அமைச்சர்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல, எஸ். பி. திசாநாயக்க, சரத் அமுனுகம, பிரதியமைச்சர் அப்துல் காதர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட துடன் இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:-
கிராமத்தானுக்கு என்ன செய்ய முடியும் என என்னைப் பற்றி கூறியவர்களுக்கு நாம் எமது வேலையை செய்து காட்டியுள்ளோம். கிராமத்திற்காக, கிராமிய மக்களுக்கே நாம் அதிகம் செய்கின்றோம். அவ்வாறு நோக்கினாலும் 100க்கு 70 வீதமான மக்கள் கிராமத்தில்தான் வாழ்கின்றனர்.
நாம் நகரங்களைக் கைவிடவில்லை. நகரங்களை அபிவிருத்தி செய்கின்ற அதே வேளை, கிராமங்களையும் அபி விருத்தி செய்து வருகின்றோம். கிராமங்க ளில் செளகர்யத்தை நகரங்களுக்குக் கொண்டு வருவதே எமது நோக்கம். தற்போது கிராமப் புறங்களிலிருந்து சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவா கியுள்ளனர். சுசந்திகா, ஜயசூரிய, தர்ஷிகா போன்றோர் வெளி கிராமங் களிலிருந்து உலகளவில் வெற்றி பெற் றுள்ள வீரர்கள் கிராமத்தவர்களிடம் ஒளிந்திருந்த திறமைகளை நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.
உலகம் முன்னேறிச் செல்கையில் நாடும் முன்னேறி மக்கள் மனதும் முன்னேற வேண்டும். நகரப் புறங்களை விட கிராமப்புறங்கள் தற்போது முன்னேறி வருகின்றன. கொழும்பிலுள்ள பாடசாலைகளில் இல்லாத வசதிகள் தற்போது கிராமிய பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹிந் தோதய விஞ்ஞான ஆய்வு கூடம் திறக் கப்பட்ட பின்னர் கிராமிய இளைஞர்கள் யுவதிகளும் நகர்ப்புற இளைஞர்களுடன் போட்டி போடும் அளவிற்குத் தொழில் நுட்பத்தில் உயர்ந்துள்ளனர்.
எதைச் செய்தாலும் விமர்சிக்கின்ற எதிர்க்கட்சியினர் இப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் கூறிவருகின்றனர். சொல்வதற்கு எதுவும் இல்லாதவர்களே இவ்வாறு பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ரணசிங்க பிரேமதாச தம்மிடமிருந்த நிறைவேற்று அதிகாரத்தை சீருடையுடன் இருந்த 650 பொலி¡ரை புலிகளிடம் சரணடையவும் அவர்களைப் படுகொலை செய்ய ஒப்படைக்கவும் பயன்படுத்தினார். நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கே அவர்கள் அந்த அதிகாரத்தை உ பயோகித்தனர். புலிகளுக்கு ஆயுதம் வழங்கினர். அப்போதெல்லாம் ரணில் விக்கிரமசிங்க எதுவும் பேசவில்லை. புலிகளுக்கு பணம் வழங்கும் போதும் மெளனமாகவே இருந்தார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்த இரண்டரை வருடகாலம் எடுத்தது. நானும் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் கொல்வின் ஆர். டி. சில்வா எமது தற்போதைய பிரதமர் போன்றோர் பாராளுமன்றத்தில் இருந்தனர். தொடர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. பாராளுமன்றமே இந்த மாற்றத்தை மேற்கொள்ள அங்கீகாரமளித்தது.
அதேவேளை, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சம்பந்தப்பட்டோரை தங்கவைத்து பாராளுமன்றத்துக்கு ஹெலிகொப்டர் மூலம் அவர்களைக் கொண்டுவந்து அவர்களுக்கே தெரியாமல் பலவந்தமாக கையுயர்த்தச் சொல்லிதான் 13வது திருத்தத்தைக் கொண்டு வந்தனர்.
இன்று முழு உலகமும் எமது அரசியலமைப்பில் மாற்றம் தேவை என்பது பற்றி என்னிடம் கூறி வருகின்றது. எனினும் அதை நான் செய்யமாட்டேன். அதற்கு எனது நிறைவேற்று அதிகாரத்தைப் பாவிக்கப் போவதில்லை. பாராளுமன்றத்தினூடாகவே அதைச் செய்ய வேண்டும் என்று கூறினேன்.
சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இதை அறிய வேண்டும். மக்கள் மத்தியில் இது கொண்டு செல்லப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்போர் மக்களின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். அதனால்தான் நான் பாராளுமன்ற தெரிவுக்குழுவை இதற்காக நியமித்தேன். ஒரு வருடத்திற்கு முன்பே அதை நியமித்து அதில் சாட்யசிங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நிறைவேற்று அதிகாரம் தேவையில்லை என்று தெரிவுக் குழுவில் கம்பஹா எம். பி. ஒருவரும் கூறியுள்ளார். அதனை வைத்து நான் அவரை நீக்கவில்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து எமது கட்சியின் கருத்தல்லவே.
சிலர் தமது சாட்சியத்தின் போது நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டால் வெளி நாட்டிலுள்ள புலிகளின் கை ஓங்கும் என்றும் ஸ்திரமற்ற அரசாங்கமே இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
பாராளுமன்றமும் மக்களும் இதனை அங்கீகரித்தால் அதனைச் செய்ய நான் தயாராகவே உள்ளேன். எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். மக்களிடம் இதனைத் தெரிவித்து கருத்துக்களைப் பெற வேண்டும். அவசரமாக எதையும் செய்ய முடியாது.
பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு சென்று சாட்சியம் வழங்குமாறு நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறினேன். அவரொ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாமல் அதில் பயனில்லை என்று கூறிவிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவில்லை. ஐ. தே. க.வும் வரவில்லை. நிமல் சிறி பால டி சில்வா இதுபற்றி கூறுகையில் எவரும் வரவில்லை. என்றே கூறினார்.
அரசியலமைப்பு என்பது நாட்டின் முக்கியமான ஆவணம் ஜனநாயகத்தின் அடிப்படையாக விளங்கும் மக்கள் சொத்து. நாட்டைப் பாதுகாக்கும், நாட்டைச் செயற்படுத்தும் ஆவணம் அது. அவசரம் அவசரமாக அதில் மாற்றம் ஏற்படுத்த அது ஒரு சஞ்சிகையல்ல. இதனை அவசர சட்டத்தின் மூலம் அவசரமாக தவறான முறையில் திருத்துவது தவறானது-
நானும் நாட்டுக்காக போராட்டம் செய்து சிறைக்குச் சென்று பலவேறு கஷ்டங்கள் அர்ப்பணிப்புகளை செய்தவன். நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் எமக்கு உள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.
தேர்தலுக்கு முன் இதனை மேற்கொள்ள வேண்டும் என அவசரப்படுபவர்களுக்காக எதையும் செய்ய முடியாது. இது ஆற அமர நிதானமாக மேற்கொள்ள வேண்டிய விடயம்.
எனினும் நாட்டில் நிலையான அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் பயணத்தைக் காலை வாரிவிட எவராவது முயற்சித்தால் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரசியல் சாசனப்படி உமது ஆட்சி நடைபெறவில்லை. சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட வில்லை. உமக்கு இருக்கும் அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் கொலை செய்யப்பட்டும் தாக்கப்பட்டும் இன்று வரை அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே உமது ஆட்சி அகற்றப்பட்டு நீதியும் நியாயமுமான ஆட்சி நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான காலம் நெருங்கி விட்டது.
ReplyDeleteஉம்மைப்போன்ற சர்வாதிகார்களுக்கும், அனீதியானதோர் ஆட்சியை நடத்துவோருக்கும் எதிராக நேற்றும் இன்றும் நாளையும் ஏழை எளிய மக்கள் தட்டிக்கழிக்கப்படுள்ளார்கள், அனீதம் இழைக்கப்பட்டுள்ளார்கள். விசேடமாக உமது சகோத்ரர் நாட்டின் வழங்களுடன் விளையாடுவதை மட்டும் இல்லாமல் சிறுபானமையினரது உரிமை உடைமை மட்டும் இறைமையுடன் விளையாடுவதை ஒருபோதும் யாராலும் அனுமதிக்க முடியாது. தற்போதைய காலகட்டத்தில் நாட்டு மக்கள் அரசாங்கத்திடம் வாழ்வுக்காக வழிவகுத்துத்தரும்படி கேட்கவில்லை எம்மை சாவடிப்பதில் இருந்து விலகி நிற்கவேண்டியே கேட்கின்றார்கள். அப்படியொரு ஆரக்கன் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.
ReplyDeleteஎல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ் ஒருவன் உள்ளான் அவன் கண்டிப்பாக சரியானதொரு முடிவை தருவான் என்று நாம் எதிர்பார்கின்றோம்.
18ம் திருத்தம் எப்படிக் கொண்டு வரப்பட்டதென்று சற்றுக் கூறுவீர்களா?
ReplyDelete