Header Ads



ஜனாதிபதிக்கு பயம் ஏற்பட்டுள்ளது, ஞானசார மன்னிப்பு கேட்டால் இணைந்து செயற்பட தயார்

நாடாளுமன்ற மரபுகள் தெரியாத ஒருவராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இருக்கிறார் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியும் என்று நேற்று உயர்நீதிமன்ற சட்டவிளக்கம் நாடாளுமன்றத்துக்கு கிடைத்தது.

எனினும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாää மஹிந்த ராஜபக்ச போட்டியிடமுடியும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இதனை கண்டு தாம் வேதனைப்படுவதாக அசாத் சாலி குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு தேர்தல் ஒன்று வரும்போது 5 ஆண்டுகளுக்கு முடிந்துப்போன யுத்தம் பற்றி பேசுகிறார்.

மாவிலாறு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் பற்றி அவர் தற்போது பேசுகிறார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,  தமது அரசாங்கத்தின் ஊழல்களை பற்றி பேசியிருந்தால், அவற்றுக்காக ஆணைக்குழுக்களை அமைத்திருந்தால், அரசாங்கத்தில் உள்ள எத்தனை பேர் ஆணைக்குழுவின் முன் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று பார்த்திருக்க முடியும்.

இதன் காரணமாகவே சுயாதீன ஆணைக்குழுக்களை கலைத்து அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக 17வது அரசியலமைப்பை ரத்துச்செய்து 18வது அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர்; யார் என்ற பயம் ஜனாதிபதி தற்போது ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே கரு ஜயசூரியவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏன்? ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ரணிலுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தல் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஜனாதிபதி பொதுவேட்பாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள ஏன் ஆதங்கப்படுகிறார் என்று தெரியவில்லை.

இதேவேளை எதிர்வரும் 15ம் திகதியன்று ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அமைச்சுக்கான நிதியொதுக்கீடு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இதன்போது அவரும் அத்துரலியே ரத்தன தேரரும் சம்பிக்க ரணவக்கவும் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமரவுள்ளனர்.

மேலும் பல ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சி வரிசையில் சென்று அமருவர் என்று அசாத் சாலி குறிப்பிட்டார்.

பொதுபலசேனாவின் ஞானசார தேரர், 19வது அரசியலமைப்பை வரைந்துள்ள ரத்தன தேரரை பைத்தியம் என்று கூறுகிறார்.

ரத்தன தேரர்ää அசாத் சாலியுடன் அமரப்போகிறார் என்று ஞானசார தேரர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் ஞானசார தேரரும் மன்னிப்பு கேட்டு வந்தால் அவருடன் இணைந்து நல்லதற்காக செயற்பட தயார்.

எனினும் தமது தூசணம் பேசாத பௌத்த பிக்குக்களே அவசியம் என்று அசாத் சாலி குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.