அழகிய நாட்டை எம்மால் உருவாக்க முடிந்தது - கோட்டாபய ராஜபக்ஷ
கொழும்பின் தோற்றமே பிறநாட்டவர்க்கு இலங்கை மற்றும் இலங்கையர்கள் பற்றிய எண்ணத்தை முதலில் ஏற்படுத்துமென பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தியமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானம் நிலைநிறுத்தப்பட்டதும் கொழும்பின் சூழல் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் களைந்து மக்களை ஆரோக்கியமாக வாழ வழி செய்வதே எமது பிரதான இலக்காகவிருந்தது. அதன் பிரதிபலனாக எமக்கு கிடைத்ததே இந்த ‘அழகிய நாடு’ எனவும் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறினார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு லேக்ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘அழகிய நாடு, சுபீட்சமான எதிர்காலம்’ என்னும் இணைப்பு பத்திரிகையினை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தினப் பத்திரிகைகளான தினகரன், தினமின மற்றும் த சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகைகளுடன் மாதாந்தம் வெளியிடவுள்ளன. இந்த இணைப்பு பத்திரிகையின் உத்தியோகபூர்வ வெளியீடு நேற்று 20-11-2014 மாலை லேக்ஹவுஸ் நிறுவன கேட்போர் கூடத்தில், நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மூன்று மொழிகளிலுமான இணைய தளங்களும் அமைச்சின் செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். கொழும்பை அழகுபடுத்த வேண்டு மென்பது எமது பிரதான குறிக்கோளாக இருக்கவில்லை. சுத்தம் மற்றும் சுகாதாரத் துடன் கூடிய கொழும்பை உருவாக்கியதன் விளைவாகவே அழகுமிக்க இந்த கொழும்பு உருவானது.
சேரிப்புறங்கள், குப்பைத் தொட்டிகள், வெள்ளம் ஆகியன காரணமாக கொழும்பு வாழ் மக்கள் நீண்டகாலமாக பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வந்தனர்.2008 ஆண்டளவில் வெளிநாட்டைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரியொருவரை நான் இங்கு அழைத்து வந்தபோது அவர் ஜனாதிபதி மாளிகையை வந்தடைந்ததும் இந்த நாட்டில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திப் பணிகள் அதிகம் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அதனை நினைவில் வைத்து, எனது கவனத்தை இதன் பக்கமாக செலுத்தினேன். அனுபவங்களை நாம் வெளிநாடுகளுடன் பகிர்ந்துகொண்டோம். எமது அதிகாரிகள் வெளிநாட்டில் பயிற்சிகளுக்கு அனுப்பப்பட்டனர். இதன் விளைவாகவே அழகிய நாட்டை எம்மால் உருவாக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
.jpg)
iwanda appanda veeddu soththa withthu iwaru perisa seithu kilichchidaru..
ReplyDelete