Header Ads



ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரரை நிறுத்த, முன்னணி சோசலிச கட்சி தீர்மானம்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முன்னணி சோசலிச கட்சி தீர்மானித்துள்ளது.

ஏனைய இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய சோசலிச கட்சி, மாவோவத கம்யூனிஸ்ட் கட்சி, பராக்ஸிக்ஸ் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்ற கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டுமென முன்னணி சோசலிச கட்சியின் அரசியல்பீட உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

இடதுசாரி கட்சிகளும் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாரை இடதுசாரி வேட்பாளராக களமிறக்குவது என்பது தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.