Header Ads



எனக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டது, கூற வெட்கமாக உள்ளது - கண்ணீர் மல்கிய சந்திரிக்கா

மீண்டும் அரசியல் எனும் தனது தாய் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தான் மகிழ்வதாக கண்ணீர் மல்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். 

இன்று 21-11-2014 நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அவர் இங்கு மேலும் கூறியதாவது, 

9 வருட மௌத்தின் பின் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தினம் தினம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் காரணமல்ல. எனக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டது. அவை ஒவ்வொன்றையும் கூற வெட்கமாக உள்ளது, ஆனால் அது இங்கு முக்கியமில்லை. 

இங்கு பிரதானமானது நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய தேவை, சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். 

கொலை, துஷ்பிரயோகங்களே நாட்டில் இடம்பெறுகின்றன. அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதோடு, எதிர்ப்பவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். 

பலர் என்னை பொது வேட்பாளராக களமிறங்க கூறினர். 18வது அரசியல் அமைப்பு சட்டத்தின் படி முடியும் என்றனர். 

ஆனால் மீண்டும் அவ்வாறு போட்டியிட எந்தவொரு அவசியமும் எனக்கு இல்லை, அரசியல் ரீதியாக தேவையான உதவிகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்ப உதவுவேன். எந்த பதவியும் தேலையில்லை. என்றார். 

மேலும் "சிறுபான்மையினருக்கு உரிமையை பெற்றுக் கொடுத்தல் மற்றும் நிறைவேற்று அதிகார முறையை நீக்குதல் ஆகிய இரு விடயங்களை பிரதானமாக கொண்டு தான் ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வந்ததையும், எனினும் அதனை நிறைவேற்ற முடியாமல் போனதையும் சந்திரிக்கா இதன்போது சுட்டிக்காட்டினார். 

No comments

Powered by Blogger.