மைத்திரிபால + சந்திரிகா சந்திப்பு
எதிரணி பொது வேட்பாளராக போட்டியிடப்போவதாக கூறப்பட்டுவருகின்ற சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நேற்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் பொது வேட்பாளர் விவகாரம் குறித்தும் சந்திரிகா பண்டாரநாயக்கவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்துரையாடியுள்ளதாக எதிரணி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment