இனவாதம் பூசி அசிங்கப்படுத்தாமல் இதய சுத்தியுடன் அணுகுங்கள் - ஹஸன் அலி
(எம்.ரீ. ஹஸன் அலி பா.உ. செயலாளர் நாயகம். முஸ்லிம் காங்கிரஸ் - காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் குழு நிலை விவாதத்தில் ஆற்றிய உரை) கௌரவ சபாநாயகர் அவர்களே
காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் குழு நிலை விவாதத்தில் இன்று அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் சம்பந்தப்பட்ட சில முக்கிய விடயங்களைப் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் தந்தமைக்காக தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சென்ற வருடத்தின் குழு நிலை விவாதத்தின் போது எமது அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் விவசாயிகளின் பல்வேறு காணிப்பிரச்சினைகள் பற்றி நான் குறி;ப்பிட்ட வேளை அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்துக்கு முன்னர் எமது விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
காணி அமைச்சரவர்கள் தீரவை பெற்றுத் தரும் விடயத்தில் மிகவும் பிரயாசையுடன் செயல்பட்டுவந்தது எமக்குத் தெரியும். துரதிஷ்டவசமாக அவருக்கு வழங்க வேண்டிய ஒத்தாசைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து வழங்காத ஒருவிதமான நிலமை நிர்வாக ரீதியாகக் காணப்படுகின்றதையும் நாம் அறிவோம். எனினும் இவ்வாறான தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்டத் தேர்தல்களுக்கு முன்னர் ஒரு நல்ல முடிவை அவர் பெற்றுத் தர வேண்டும் என எமது மாவட்ட விவசாயிகள் திட்டவட்டமாக எதிர் பார்க்கின்றனர்.
அம்பாறை மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால காணிப்பிரச்சினைகளுக்கு பிரதான காரணிகளாக காணி அமைச்சின் ஆளுமைக்குட்பட்ட சில திணைக்களங்களும், மற்றும் வனஇலாகா, வன விலங்குகள் பாதுகாப்பு இலாகா, நீர்பாசன இலாகா, தொல்பொருள் இலாகா, பாதுகாப்புப்பிரிவு, சீனித் தொழிசாலை, ஓட்டுத் தொழிற்சாலை போன்றவை விவசாயிகளாலும் காணிச் சொந்தக் காரர்களாலும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும் ஒன்றிணைத்து பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய அம்பாறை மாவட்டத்தின் மாவட்டச் செயலகம் முஸ்லிம்களின் காணி சம்பந்தப்பட்ட விடயங்களில் மெத்தனப் போக்கையே தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றது. சாதாரண விவசாயி ஒருவர் தனக்குப் பரிச்சயமான தமிழ் மொழியில் மாவட்ட மட்ட செயலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளுடன் மனம் விட்டுப் பேசி தங்களது பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதற்கு சாதகமில்லாத ஒரு சூழல் நீண்டகாலமாக தொடர்ந்து நிலவி வருகின்றது. இது பற்றி இந்த சபையில் நாம் பல முறை எடுத்துக் கூறியும் எவ்விதப் பிரயோசனமும் கிடைக்கவில்லை.
இனிவரும் காலங்களில் அவ்வாறான சுமூக நிலமை தோன்றுவதற்கான அறிகுறிகள் கூட தென்படுவதாக இல்லை. சமூகங்களுக்கிடையில் விதைத்து வரும் இனவாத, பிரதேசவாத, பேரினவாத சிந்தனைகளால் எம்மைக் கூறுபடுத்துவதற்கும் துருவமயப் படுத்துவதற்குமான அரசியல்காய்நகர்த்தல்கள் மேலோங்கி வருவதால் சிறுபான்மையினரின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே மாறி வருவதனை கண்டு நாம் கவலைப்படுகின்றோம்.
நம்பிக்கையிழந்த விவசாயிகளும், காணி சொந்தக்காரர்களும் எம்மிடம் அடிக்கடி முறையீடுகளைச் செய்த வண்ணம் உள்ளர்கள். அவர்களின் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடும் இறுதி முயற்சியாக இந்த உயர் சபையில் இயங்கும் பொது மனுக்குழுவிற்கு (Pநவவைழைn ஊழஅஅவைவநந) அவர்கள் தங்களது மனுக்களை என் மூலம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளார்கள். அக்கரைப்பற்று பறக்கத் நகர் நீர்விநியோக வாய்க்கால் கண்டம், நுரைச்சோலைக்கண்டம், புட்டம்பை கண்ணகி புரம், தோணிக்கல் கொக்கிளுவாய் கண்டம், சம்மாந்துறையிலுள்ள மல்லிகைத்தீவு, கள்ளியம்பத்தை குருவிக்காடு, வளத்தாப்பிட்டி கறங்காவட்டை, வளத்தாப்பிட்டி கறங்கா மேற்கு, அட்டாளைச்சேனை வெள்ளக்கல் தோட்டம், இறக்காமம் குடுவில் வடப்பத்துவெளிக் கண்டம், பொத்துவில் பள்ளியடிவட்டை றத்தல் தென்கண்டம், லஹூகலை கிரான் கோமாரி
ஆகிய கண்டங்களைச் சேர்ந்த 1155 விவசாயிகளின் 3822 ஏக்கர் காணிகள் பற்றிய மனுக்கள் இதுவரை பாராளுமன்ற மனுக்குழுவிற்கு பாரப்படுத்தப் பட்டுள்ளன. மேலும் பல மனுக்களை இன்னும் சில விவசாயிகள் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கின்றார்கள். வெகுவிரையில் அவர்களது ஏனைய மனுக்களும்; இச்சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று முன் கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வழிகளிலும் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வை வேண்டி கடந்த காலங்களில் இவர்கள் எடுத்த முயற்சிகளெல்லாம் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்ட சோகக்கதைகளை அவர்கள் தங்கள் மனுக்கள் மூலம் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.
யுத்த காலத்தில் முப்பது வருடமாக விவசாயம் செய்ய முடியாமல் போன காரணத்தால் காடுகள் வளர்ந்து கிடந்த வயல்களுக்கு இப்போது வன இலாகா உரிமை கொண்டாடுகின்றது. ஒருதலைப்பட்சமாக தான்தோன்றித்தனமாக பழிவாங்கும் நோக்கோடு எந்தவித முன்னறிவித்தலுமின்றி பிரதேச செயலாளர்கள், விவசாயிகளின பிரதிநிதிகள் போன்றோரின்; கலந்தாலோசனைகள் எதுவுமின்றி பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் முஸ்லிம் விவசாயிகளின் காணிகளை வன இலாகா பறித்;தெடுத்துள்ளது. கரும்புச் செய்கைக்காக சுவீகரிக்கப்பட்ட முஸ்லிம் விவசாயிகளின் காணிகள் பெரும்பான்மை சமூகத்தினருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுத் தொழிசாலை அதிகாரிகள் எமது மக்களின் காணிகளைத் தனியாருக்கு குத்தகைக்குக் கொடு;த்து பணம் கறந்து வருவதாக தற்போது எமக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன. அம்பாறையில் சென்ற வருடம் நடைபெற்ற 'தியட்டகிருல்ல' கண்காட்சி மைதானத்துக்குப் பாதுகாப்பு வழங்கவென தற்காலிகமாகப் பெற்றுக்கொண்ட தனியார் காணிகளை கண்காட்சி முடிந்து ஒருவருடம் சென்ற பின்னரும் உரிமையாளர்களுக்கு திருப்பிக் கொடுக்காமல் பாதுகாப்புத்தரப்பினர் இழுத்தடிக்கின்றனர். தற்போது அந்தக் காணிகளில் புதிதாக பாதுகாப்பு படையினரால் மரங்கள்; நடப்படுவதாக காணிச் சொந்தக் காரர்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
முஸ்லிம் கிராமங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டுகளின் நீர்மட்டத்தை உயர்த்தி முஸ்லிம்களின் காணிகளை நீரில் மூழ்கடிக்கடிக்கடிக்கும்; அநியாயம் எமது பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. வளத்தப்பட்டியில் உழுது நிலத்தைப் பண்படுத்தி இரசாயன கலைவைகள் தெளித்து விவசாயம் செய்வதற்கு தயாராகிய 90 ஏக்கர் வயல் காணிகள் தற்போது நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. யுத்தம் முடிந்ததற்கு பின்னர் காணிப்பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்காக ஒரு விசேட பொறிமுறையை எமது மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் எனப் பல முறை இந்த சபையில் கோரியுள்ளோம்.
எதையும் சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. மக்கள் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காணிச் சொந்தக்காரர்கள் போன்றோரின் பங்குபற்றுதல்களுடன் நியாயமான முடிவுகளை எட்டக் கூடிய அதிகாரத்துடனான வகையில் ஒரு அமைப்பு உடனடியாக செயல்படாதவரை எமது காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக்; காண முடியாது. விவசாய கமநல விடயங்களில் எமது மாவட்டத்தில் இனரீதியான பாகுபாடுகள் காட்டப்பட்டு வருகின்றன.
யுபசiஉரடவரசயட சுநளநயசஉh Pசழனரஉவழைn யுளளளைவயவெள என்ற விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் எமது மாவட்;டத்திலுள்ள பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பிரதேசங்களுக்கு மட்டுமே இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இந்நியமனங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் இந்நியமனங்கள் இன்றுவரை வழங்கப்படவில்லை.
ஒரே மாவட்டத்தில் இனரீதியான நிர்வாக பாகுபாடுகள் இவ்வாறு பல விடயங்களில் காட்டப்படுகின்றன. சிங்களம் பேசத் தெரியாத 90மூ மக்களைக் கொண்ட எமது பிரதேசங்களிலுள்ள விவசாயிகள் தமிழ் தெரியாத உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியாது தடுமாறுகின்றனர். மத்திய அரசாங்கத்தின் ஆளுமைக்குட்பட்ட குடியேற்ற உத்தியோகத்தர்கள் (ஊழடழnணையவழைn ழககiஉநச) மற்றும் குநைடன ழுககiஉநச நியமனங்கள் இனரீதியாகவே எமது மாவட்டத்தில் நியமிக்கப்படுகின்றனர். அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடி வேம்பு, இறக்காமம், சம்மாந்துறை, நாவிதன் வெளி பிரதேசங்களில் 24 பேர் கடமையாற்ற வேண்டிய தேவையுள்ளது. ஆனால் மொத்தமாக 4 பேர் மட்டுமே கடமையாற்றுகின்றனர்.
தமிழ் பேசும் பிரதேசங்களில் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இழுத்தடிப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் மத்திய அரசாங்கமும் ஆளணிக்குறைபாடுகளை வேண்டுமென்று நீடித்துவைத்திருப்பதாக விவசாயிகள் எம்மிடம் குறைபட்டுக்கொள்கின்றனர். அதே வேளை சிங்களப் பெரும்பான்மை பிரதேசங்களில் எவ்வித குறைபாடும் இல்லாமல் ஆளணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. எமது மாவட்டத்திலுள்ள 29 கமநல சேவை நிலையங்களில் 17 நிலையங்கள் தமிழ் பேசும் பிரதேசங்களில் உள்ளன. ஆனால் இந்த நிலையங்களை மேற்பார்வை செய்யும் இரண்டு பிரதி ஆணையாளர்களாக சிங்களம் பேசுபவர்களை மட்டுமே நியமித்துள்ளனர். தமிழ் பேசும் சமூகத்தின் நன்மை கருதி எமது சமூகத்திலிருந்து ஒருவரை நியமிப்பதற்கு உங்களுக்கு ஏன் மனம் வருவதில்லை எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
அதே போன்று அண்மையில் சிறிய நீர்ப்பாசன குளங்கள் எமது மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் முஸ்லிம் பிரதேசங்கள் இந்தத் தெரிவில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஓரவஞ்சனைகள் நடைபெறுவது பற்றி நாம் வெளிப்படையாகக் கேள்விகள் எழுப்பினால் எம்மை இனவாதிகள் என்று குறை கூறுவதனையே வாடிக்கையாகக் கொண்டுள்ள ஒரு சிலர் இப்போது தலையெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான வேறுபாடுகளிலிருந்து விலகிக் கொண்டு தமிழ் பேசும் மக்கள் தமது கருமங்களை சிரமமின்றி மேற்கொள்ளும் நோக்குடன் நாம் கல்முனை கரையோர மாவட்டத்தைக் கோரிய போது இந்த நாட்டைப் பிரிப்பதற்கு நாம் முயற்சிப்பதாக சிலர் கூறுகின்றனர். இக்கோரிக்கை ஒன்றும் புதியதொன்றல்ல. 1978ம் ஆண்டு பெரும்பான்மை சமூகத்தினரைக் கொண்ட மொறகொட ஆணைக்குழுவின் சிபாரிசுவே இதுவாகும். அந்த ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டபடி அன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியாகிய கல்முனை , சம்மாந்துறை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு புதிய மாவட்டத்தைப் பிரகடனப்படுத்தாமல் மொனறாகலை மாவட்டத்திலிருந்து 1400 ச.கி. மீட்டர் பரப்பளவுடைய பிந்தனப்பற்று என்ற நிலப்பரப்பை மேலதிகமாக உள்ளடக்கி வேண்டுமென்றே ஒரு புதிய எல்லையைக் கொண்ட மாவட்டம் உருவாக்கப்பட்டது.
கல்முனையிலிருந்த முந்தைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதிக்கான நிர்வாக மையமும் அங்கிருந்து பெரும்பான்மைப் பிரதேசமான அம்பாறைக்கு மாற்றப்பட்டது. அன்றிலிருந்து கடந்த 53 வருடங்களாக சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த எவருமே புதிதாக அமைக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்துக்கான ஒரு அரச அதிபராக நியமிக்கப்படவில்லை. இவ்வாறான எழுதப்படாத விதியாக மாற்றாந்தாய் மன்பான்மையுடன் கச்சேரி நிர்வாகம் நடைபெற்று வருவதனை தயவு செய்து உங்கள் அவதானத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்நாட்டில் ஆட்சி அதிகாரத்திலிருந்த தலைவர்கள் அனைவரும் எமது கரையோர மாவட்ட வேண்டுகோளுக்கு அவ்வப்போது இணக்கம் தெரிவித்திருந்தார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களுடன் நாம் செய்துகொண்ட உடன்படிக்கைகள் அனைத்திலும் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது. 20.07.2000ம் ஆண்டு எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் தான் மரணிப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு இது பற்றி ஒரு விசேட கடிதத்தின் மூலம் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை உறுதிப்படுத்திள்ளார்.
10.10.2000ம் ஆண்டு புதிய அரசை ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் அமைத்த போது நாம் செய்த உடன்படிக்கையில் 7வது பந்தியில் இது உள்ளடங்கியுள்ளது.
2001ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐ.தே.க வுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் எமது தலைவர் ரவூப் ஹக்கீமுடன் கௌரவ ரணில் விக்கிரமசிங்க, கௌரவ கரு ஜயசூரிய, கௌரவ. காமினி அத்துக்கோறள, திரு சரித்த ரத்வத்தை ஆகியோர் கையொப்பமிட்ட பத்திரத்தில் 20வது பந்தியில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. 20.02.2001ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.க வுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 17வது பத்தியில் இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பின்னர் 06.1.2005ல் ஐ.தே. கவுடன் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இவ்விடயங்கள் நிர்வாக ஏற்பாடுகள் என்ற தலைப்பின் கீழ் 1வது விடயமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 05.02.2007ல் தற்போதைய ஜனாதிபதியவர்களின் அரசாங்கத்தில் இணையும் போது ளுடுகுP உடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் நிர்வாக விடயங்கள் என்ற தலைப்பின்கீழ் 1வது விடயமாக இது உள்ளடக்கப்பட்டது. இறுதியாக கிழக்கு மாகாண சபை தேர்தலுக்குப் பின்னர் மாகாணசபை ஆட்சியை அமைப்பதற்கு ஆதரவை வழங்குவதற்கு முன்னர் எமக்கு 18.09.2012ல் தரப்பட்ட வாக்குறுதிகளில் இது 2வது விடயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதுமட்டுமன்றி எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபும், மலையக மக்களின் பெரும் மதிப்புக்குரிய தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானும் இணைந்து கையொப்பமிட்டு 08.06.94ல் அன்றைய ஜனாதிபதி டீ.பி.விஜயதுங்கவுக்கு எழுதிய கடிதத்தில் இந்த விடயம் 5வது பந்தியில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதே போன்று தமிழ் சமூகத்தின் தலைவர்கள் எம். சிவசிதம்பரம், நீலன் திருச்செல்வம் போன்றவர்களும் எமது மறைந்த தலைவருடன் உடன் பட்டிருந்ததற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
இவ்விபரங்களையெல்லாம் நான் இங்கே கூறுவது எதற்காகவென்றால் இந்தக் கரையோர மாவட்டக் கோரிக்கை என்பது எமது மறைந்த தலைவரினால் முன்வைக்கப்பட்டு அனைத்துத் தரப்பினராலும்; ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நியாயமான கோரிக்கை என்பதனை தெளிவுபடுத்துவதற்கேயாகும். இந்த நாட்டில் அவ்வப்போது கோலோச்சிவந்த அனைத்து தலைவர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டு அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயமே இதுவாகும். துரதிஷ்டவசமாக அன்றிருந்த சகஜ நிலமை இன்று இந்த நாட்டில் தொலைந்து போய்விட்டுள்ளது. அதனால் எமது இந்தக் கோரிக்கையானது பிரிவினை வாதத்துடன் ஒத்து ஊதப்படுகின்றது. யார் அதிகமாக ஊதுவது என்பதில் இப்போது போட்டியும் ஏற்பட்டுள்ளது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இன ரீதியான நிர்வாக போக்குதான் கரையோர மாவட்டத் தேவைக்கான காரணங்களாகும்.
2013ம் ஆண்டிற்கான அம்பாறை கச்சேரியின் ஆண்டறிக்கை இந்த சபையில் சமர்பிக்க பட்டிருந்ததை நாம் அறிவோம். அந்த அறிக்கையின் முகவுரையில் சிங்கள பெரும்பான்மையின சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் வரலாற்று பின்னணி என்பன மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. எமது மாவட்டத்தில் பெரும்பான்மையினராக வாழ்ந்துவரும் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பாரம்பரியம் பற்றி ஒருவார்த்தையேனும் அதில் குறிப்பிடப்படவில்லை.
தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் ஒரு மாவட்டத்தின் ஆண்டறிக்கை இவ்வாறு தயாரிக்கப்பட்டிருப்பதைப் பற்றி விசனத்துடன் நாங்கள் கேள்வி எழுப்புவது ஒரு இனவாதமா? அல்லது பிரிவினை வாதமா? எந்த மனோ பாவத்தில் இந்த மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை இனங்கள் நோக்கப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவேதான் எங்கள் நியாயமான கோரிக்கைகளை இனவாதம் பூசி அசிங்கப்படுத்தாமல் இதய சுத்தியுடன் அணுகி எங்கள் கௌரவத்தையும் எங்கள் தனித்துவத்தையும், எங்கள் உரிமைகளையும் இந்த நாட்டின் அரசியல் அமைப்பில் உறுதிபடுத்தபட்டவாறு தந்து உதவுங்கள் என்று கேட்டு விடைபெறுகின்றேன்.
நன்றி
.jpg)
தமிழனின் நிலத்தை இதுவரைக்கும் அபகரித்தது போதாதா.மூச்சுக்கு மூச்சு இறைவனின் பெயரை சொல்கின்ற முஸ்லிம் சகோதரர்களே உங்கள் மனச் சாட்சிப்படி சொல்லுங்கள்.யுத்த காலத்தில்இடம்பெயர்ந்த அல்லது ஊர்காவல் படையால் விரட்டப்பட்ட தமிழ் மக்களின் நிலங்களை நீங்கள் அபகரித்து உங்கள் பெயர்களுக்கு உறுதி முடிக்கவில்லை என்று...
ReplyDeleteஅம்பாறை மாவட்டத்தில் நிலங்கள் மட்டுமல்ல தமிழர்களின் கிராமங்களே
இன்று உங்கள் கிராமங்களாக மாறியிருக்கின்றது..இதை ஆம் என்கிறீர்களா இல்லை என்கிறீர்களா
karan kanna
ReplyDeleteஉண்மையா? அம்பாரை மாவட்டத்தில் உள்ளவர்கள் இந்த குழப்பவாதிக்கு ஒரு பதிலை சொல்லுங்கப்பா? அடிக்கடி இந்த பையன் இதே பாட்டைப்பாடிக்கொண்டிருக்கின்றான்.