பேயிடம் பிடுங்கி, பிசாசிடம் கொடுத்த கதையாய் போய் விடக்கூடாது..!
(றிகாஸ்)
சர்க்கரை நோயாளியின் ஒரு கையில் சீனியையும் மறு கையில் கற்கண்டையும் கொடுத்த கதையாகிப்போனது இப்போது!
மைத்ரியின் வருகை சமகால அரசியல் களத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்பது ஆராயப்படவேண்டியது. இந்த புதிய களம், வருகிற தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடவும் வாய்ப்பிருக்கிறது.
இதுவரையான இலங்கையின் தேர்தல் உத்திகள் - பெரும்பான்மை, சிறுபான்மை வாக்குகளை கவர்வதை மையப்படுத்தி வகுக்கப்பட்டிருப்பதையே நாம் கண்டிருக்கிறோம். அதற்கு இந்தத் தேர்தலும் விதிவிலக்காக இருந்துவிடப்போவதில்லை.
மஹிந்த – எதிரான வேட்பாளர் என்ற ரீதிலேயே நாடு தேர்தலை சந்திக்க தயாரானது. இதன்போது மகிந்தவுக்கு எதிராக ஒரு பிரபல்யமான ஒருவரை நிறுத்தவே அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அது இப்படியொரு க்ளைமாக்ஸில் முடிந்திருக்கிறது!
ஒரு சிறுபான்மை வாக்காளராக, மஹிந்த அரசின் மீது இருந்த அபரிமிதமான வெறுப்பே தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஆட்சி மாற்றத்துக்கான ஒரு தேவையாய் இருந்தது. அப்படியிருக்க, மஹிந்தவை விட மைத்ரி எந்த வகையில் சிறப்பு என்பதற்கு யாரிடமும் விடையில்லை. சிறுபான்மையரை பொறுத்த மட்டில் ரணில் மீதுள்ள நம்பிக்கையளவுக்கு வேறு எந்த பொது வேட்பாளரையும் எளிதில் நம்பி விடுவார்கள் என்று சொல்ல முடியாது. பொலநறுவையில் முளைக்கின்ற அரிசி ஆலைகளும், அதனால் தென்கிழக்குக்கு ஏற்படப்போகின்ற பொருளாதார தாக்கங்களும் அண்மைய காலத்தில் பெரிதாகப் பேசப்பட்டன. மைத்ரி அரியாசனம் ஏறுகிற போது, இந்த நிலைமை படுமோசமாகிப் போய் தென்கிழக்கு முஸ்லிம்களின் பொருளாதார தொழிலாதாரத்தின் மீது கை வைக்கப்படலாம் என்கிற அச்ச உணர்வு எழ வாய்ப்பிருக்கிறது. ஏதோ திரை மறைவுச் சிக்கல்களால் மகிந்தவை ஆதரித்தேயாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிற கிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த விஷயத்தை தூக்கிப் பிடிப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஹக்கீமும், அதாவும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க தயாராகிக்கொண்டிருப்பார்கள். தமிழ் வாக்காளர்கள், கூட்டமைப்பு சொல்லும் ஒருவருக்கே வாக்களிப்பார்கள் என்கிற கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கிறபோது, பெரும்பாலும் மைத்ரிக்கு அல்லது தவிர்ந்து கொள்வதற்கே அதிகம் வாய்ப்பிருக்கிறது.
அண்மைய நாட்களில் நாடு, சிறுபான்மையினர் மீதான வன்முறைகளை அதிகம் சந்தித்த படியால் இதைப்பற்றியும் பேசுவது நலம். மைத்ரியின் இனவாத சிந்தனை பற்றி இதுவரை நாமறியோம். ஒருவேளை, அவர் நடுநிலை சார்ந்தவராகவே இருக்கக் கூடும். ஆயினும், ஓர் தனித் தேர்தல் என்று வரும்போது, பல்வேறுபட்ட தரப்பினரையும் திருப்திப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. நடந்த இந்த கிரக மாற்றம், ஹெல உறுமயவின் வெளியேற்றத்துடனேயே சூடு பிடிக்கத் தொடங்கியது எனலாம். அவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காத உடனேயே அவர்கள் அரசை விட்டு வெளியேறியதும், கோதமி வீதி விகாரையின் மீதான கல்வீச்சும் சிங்கள பௌத்த தேசியவாதிகளின் ஒரு பிரிவினர் ஹெல உறுமய மீது ஒரு வித அபிமானம் கொள்ள வழிசெய்துள்ளது. ஆக, சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட ஹெல உறுமயவை அனுசரித்துச் செல்ல மைத்ரிக்கு ஒரு தேவை இருக்கிறது. அவர்களுடைய பௌத்தவாத கொள்கையை இவர் எப்படி கையாளப்போகிறார் என்பதுவும் அவதானிக்கப்படவேண்டியது. இந்த வேளையில் சிறுபான்மைக்கான ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க முடியாத ஒரு சிக்கலில் மைத்ரி தள்ளப்படக்கூடும். இது, தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று முடிவெடுக்கும் சிறுபான்மை வாக்காளரை இது இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தும்!
மைத்ரி என்றல் சமஸ்கிருதத்தில் ‘கருணை’ என்பதாக பொருள்படுகிறது. மைத்ரி ஆதரவாளர்கள் இப்போதே “மைத்ரீ-ரட்ட” என்கிற கோஷத்தோடு பிரசாரம் ஆரம்பித்துவிட்டதை சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்தது. ஆயினும், சாதாரண ஒரு சிங்கள வாக்காளரை கவர்வதற்கு எதிர்கட்சிகள் என்ன வியூகம் வகுக்கப்போகிறார்கள் என்பதிலேயே அவரது வெற்றி தங்கியிருக்கிறது. பெரும்பான்மையினரை பொறுத்த வரை, அவர்களுக்கு மஹிந்த பெரிதாக எந்த தவறும் செய்துவிடவில்லை. யுத்தத்தை முடித்து வைத்திருக்கிறார்; சிங்கள பௌத்த நாட்டை நிறுவ துணை போகிறார்; தெற்கை துரித கதியில் அபிவிருத்தி செய்திருக்கிறார்; பாதைகள் அமைத்திருக்கிறார்; அண்மையில் ஒரு மிகச்சிறந்த பட்ஜெட் கொடுத்திருக்கிறார்! மேல் மத்திய அல்லது மேல்தட்டு மக்களுக்கு மஹிந்தவால் பிரச்சினையாய் பார்க்கப்படுகிற எதுவும் நாட்டின் எங்கோ ஒரு கோடியில் வாக்களிக்கப்போகும் சிங்களவருக்கு இருக்கப்போவதில்லை. ஆக – இவர்களுக்கு மகிந்தவை வீட்டுக்கு அனுப்பும் எந்தத் தேவையும் இருக்கப் போவதில்லை. அன்றாட பிரச்சினையாயிருக்கும் விலையேற்றம் என்ற ஆயுதத்தை கையிலெடுக்காதவரை எதிரணி இவர்கள் வாக்குகளை கவர முடியாது என்பதே உண்மை. ஆனால், ஜேவிபி தவிர்த்து - ஏனைய அனைவரும் நிறைவேற்று ஜனாதிபதி முறையின் பிரச்சினைகளை சொன்ன அளவுக்கு விலைவாசி பிரச்சினையை சந்தைப்படுத்தியதாக காணக்கிடைக்கவில்லை! ஒரு கீழ் நிலை வாக்காளனிடம் இந்த பருப்பெல்லாம் கண்டிப்பாக வேகப்போவதில்லை. ஏன் மஹிந்தவுக்கெதிராய் வாக்களிக்க வேண்டும்? என்பது இவர்களிடத்தில் தெளிவாய் சொல்லப்பட வேண்டும். தற்போதைய களநிலவரத்தில் அப்படியொன்று நடப்பதாய்த் தெரியவில்லை!
‘மஹிந்த அன் கோ’ வுக்கெதிராக கிளர்ந்தெழும் கூட்டம், பொலநறுவையில் ஆட்சி புரிகிற ‘மைத்ரி அன் கோ’ வைப்பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியும் இருக்கிறது. பேயிடம் பிடுங்கி பிசாசிடம் கொடுத்த கதையாய் போய் விடக்கூடாது!
பொதுவாக ஐதேக வுக்கென்று ஓர் அசைக்க முடியாத வாக்கு வங்கி இருக்கிறது. இதை அவர்கள் ‘பச்சை ரத்தம்’ என்பார்கள்! இந்த அடிப்படை வாக்கு வங்கிதான் கடந்த இருபது வருஷங்கள் இந்த கட்சியை பிடித்து வைத்திருக்கிறது. ஒரு ஆட்சி மாற்றத்துக்கான நல்ல தருணமாய் அமைந்திருக்கின்ற தற்போதைய நிலைமையில் அந்த அடிப்படை வாக்காளர்கள், நீலத்திலேயே ஊறிப்போயிருக்கிற மைத்ரிக்கு வாக்களிப்பார்களா? என்பதும் உற்று நோக்கப்பட வேண்டியது. இப்படியான ஒரு திரிசங்கு நிலையில் அவர்கள் வாக்களிக்கா நிலையையும் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இது மறுபடியும் மகிந்தவுக்கே சாதகமாய் அமையும்! மைத்ரி பொது வேட்பாளர் என்கிறபோது, அவர் எந்த கட்சி சார்ந்தவர் என்கிற கேள்வி எழும்! ஒருவேளை வெற்றி பெற்றால், மலரப்போவது மீண்டும் சு.க ஆட்சிதானா என்பது ஒரு கேள்வி! சந்திரிக்கா கூட சு.க வை மீள நிறுவுகிற ஒரு முஸ்தீபிலேயே இருப்பது தெரிகிறது. எதிர்காலத்தில் மெதுவாக தனது மகனை இலங்கை அரசியல் களத்தில் இறக்கி விட அம்மையார் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. அடுத்து வருகிற பொதுத்தேர்தலில் ஐதேக வின் நிலைப்பாடு என்ன? என்பதற்கும் தெளிவில்லை. அப்படி வருகிற நிலையில், இந்த தேர்தல் ஐதேக வுக்கான தற்கொலையாய் ஆகிப்போய் விடாதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை!
‘தேர்தலின் பின்னான அரசியலமைப்பு மாற்றமும், நிறைவேற்று அதிகார ஆட்சி முறை ஒழிப்பும்’ என்பது எந்தளவு சாத்தியம் என்பது தெரியாது. அரசியலில் ஊறி, பழம் தின்று கோட்டை போட்ட மைத்ரிபால சிறிசேன, தான் ஏதேச்சதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியாகி விட்ட பிறகு, அதனை இல்லாதொழிப்பதற்காக அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. சரி, அப்படித்தான் ஆகிவிட்டாலும் அடுத்து வருகிற பிரதமர் போட்டிக்கு ரணில் நினைப்பது போன்று அவ்வளவு எளிதில் தான் மட்டும் களத்தில் இறங்கவும் முடியாது. பொன்சேகாவுக்கு மறுபடி வாக்குரிமை வழங்க மஹிந்த முடிவெடுத்திருப்பதாகவும் ஒரு சேதி கிடைக்கிறது. அப்படியான பட்சத்தில் ரணில், சஜித், பொன்சேகா என்ற மும்முனை குடுமிச் சண்டை எழவும் வாய்ப்பிருக்கிறது. மைத்ரிக்கு தொடர்ந்து அதே அரியாசனையில் அமர்ந்திருக்க இது வாய்ப்பாகிவிடும்!
ஆக – மகிந்தவுக்கு எதிராக யார் வந்தாலும் ஆதரிப்பது என்ற முடிவிலிருந்த வாக்களர்களை – குறிப்பாக சிறுபான்மை வாக்காளர்களை மைத்ரியின் இந்த தாவுகை குழப்பத்துக்குள்ளாக்கியிருக்கிறது என்பதே உண்மை!
.jpg)
No குழப்பம் ஜாஃப்னா முஸ்லிம். நீங்கள்தான் குழப்ப வாதிகள்... முதல ஓங்கூட ந்யூஸ ஸ்டாப் பண்ணனும்...
ReplyDeleteஎப்படி ரிகாஸ் ரூம் போட்டு யோசிப்பிங்களோ?
ReplyDeleteநல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்.
உங்கள மாதிரி யோசிச்சா ஒரு வேலையும் செய்ய எலாம போகும் தொர..
மஹிந்தவுக்கு எதிராக
ReplyDeleteயார் வந்தாலும்
வாக்களிப்போம்..
அது
மைதிரியாக
இருந்தாலும் சரி
சாஸ்திரியாக
இருந்தாலும் சரியே!
பேயையும் பிசாசையும் சர்க்கரைக்கும் சீனிக்கும் ஒப்பிட்டிருக்கிறீர்கள். யார் பேய், யார் பிசாசு, யார் சர்க்கரை, யார் சீனி? எதைப்பிடிக்க, எதை விட?
ReplyDeleteவிளக்கம் தருவீர்களா ஐயா?
PISASU BETTER THEN PEEIE.FIR OWNS ENEMY CAME OUT FROM HIS HOUSE.
ReplyDeleteLIKE MAHINDA,S ENEMY CAME FROM HIS PARTY,
yes you are right, the new party name is ape jathika peramuna. time to think!!!!!!
ReplyDeleteetthanai periyaargal vanthaalum emmakkalai thirutta mudiyaathu...
ReplyDeleteeppoluthum kinatru thavalaigalaagave.., irukkinraaargal...
நடக்கப் பயந்தவன் வீடு போய்ச் சேரமாட்டான், நம்பிக்கை இல்லாதவன் எப்படி நிம்மதியாய் வாழ முடியும். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து விட்டு இந்த ஓட்டுநர் ஒழுங்காய் கொண்டு சேர்ப்பானா மாட்டானா? என்று கலங்குவதும், முன் இருக்கையில் இருந்தால் முன்பக்கம் விபத்து ஏற்பட்டால் முதலில் மடிவோமே,பின் பக்கம் இருந்தால் பின் பக்கமாக விபத்து நடந்தால் முதலில் மடிவோமே, வலப்பக்கம் உட்கார்ந்தால் வலது பக்கம் வந்து எவனாவது இடித்தால் சட்டிநியாகி விடுவோமே, இடது பக்கமும் உட்கார முடியாது எவனாவது இடது பக்கம் இடித்து விட்டால்? என்று சந்தேகத்துடன் பயணிப்பவன் எப்படி நிம்மதியாக பயணிக்க முடியும். ஒரு ஓட்டுநரை இவன் ரொம்ப நல்லவன்னு நம்பி ஏறி அவனது அக்கிரமத்தை அனுபவித்து விட்டோம், இப்போது ஓட்டுநரை மாற்றுவதற்கு, இவர்தான் தகுதியானவர் என்று எல்லோருமே கூறும்போது, சமூகத்தை சந்தேகத்திக்குள் தள்ளி விடாதீர்கள்.
ReplyDeleteoottunar sariyillayenraal... innoru bus maaralaam... aanaal, aatchiyaalan sariyillayenraal... aaru varudam kaatthirukkanum... KAATRULLAPODHE... THOOTRIKKOL...
ReplyDelete