''ஜனாதிபதி தேர்தலுக்காக மிருகங்களைப் போன்று, அங்குமிங்கும் ஓடித் திரிகின்றார்கள்'' ஞானசாரர்
சிங்கள பௌத்த பெரும்பான்மையினருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலேயே சிறுபான்மை மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சி தூர நோக்குடன் செயற்பட வேண்டும்.
அதுரலிய ரத்ன தேரரை அரசியலுக்கு அழைத்துவர நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.
2004ம் ஆண்டில் ரதன தேரருக்கு வாக்களித்தோம் என்பதனை விடவும் வாக்குகளை காணிக்கையாக்கினோம் எனலாம்.
எங்களது இளமைக்காலத்தை அர்ப்பணித்தே அவர்களை அரசியலில் ஈடுபடுத்தினோம்.
இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுக்கääஅதற்காக குரல் கொடுக்கவே இவர்களை அரசியலில் களமிறக்கினோம்.
யார் முஸ்லிம் கடும்போக்குவாதம் பற்றி பேசியது. யார் மத மாற்றம் பற்றிய சட்ட மூலத்தை கொண்டு வந்தது.
அவ்வாறான ஓர் பின்னணியில் நிர்மால் ரஞ்சித்துடன் ரத்ன தேரருக்கு உட்கார முடியுமா?
அரசியலமைப்பை ரத்து செய்யுமாறு மாதுலுவாவே சோபித தேரர் கோருகின்றார். அதுரலிய ரதன தேரர் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமென கோருகின்றார்.
என்ன இவர்கள் செய்கின்றார்கள், அவரவருக்கு பைத்தியம், விளையாட இடமளிக்க முடியாது.
அனைவரும் ஜனாதிபதி குடும்ப அரசியல் பற்றி பேசுகின்றனர். ஜனாதிபதி தேர்தல் பற்றி அறிவிக்கப்பட்டது முதல் மிருகங்களைப் போன்று அங்குமிங்கும் ஓடித் திரிகின்றார்கள்.
நாம் ஒன்றை மட்டுமே கேட்கின்றோம். பௌத்த அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டமைந்த அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
இந்தக் காலத்தில் எம்மையும் பணம் கொடுத்து மடக்கப் பார்க்கின்றார்கள். இந்த நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எமக்கு சிறந்த மக்கள் சக்தி காணப்படுகின்றது. தேர்தல்களின் போது மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கருதுகின்றோம்.
அதுரலிய ரத்ன தேரர் அரசியல் அமைப்பை மாற்றுவதற்கு முன்னதாக பௌத்த மதக் கொள்கைகள் கோட்பாடுகள் குறிப்பாக தம்மபதம் பற்றி தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டுமென ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
உனக்கு பின்னால் திருயும் மோடயர்களையும், உனக்கு பக்கம் நிற்கும் குள்ள நரிக்கூட்டங்களையும் நாடுகடத்தினால் இலங்கை மக்கள் சுபீட்சமாக வாழலாம்.
ReplyDelete