Header Ads



மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கொழும்பில் இன்று கூட்டங்கள்

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலை இலக்கு வைத்து அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் ஏட்­டிக்குப் போட்­டி­யான கூட்டங்கள் இன்று கொழும்பில் இடம்­பெறவுள்ளன.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்க கோரியும் இல்­லையேல் பொது வேட்­பா­ளரின் மூலம் அரசை கவிழ்ப்போம் என எச்­ச­ரித்தும் ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் அத்து­ர­லியே ரத்ன தேரர் தலை­மையில் ஒரு கூட்­டமும் ஜனா­தி­ப­தியை ஆத­ரித்து அமைச்சர் விமல் ­வீ­ர­வன்ச தலை­மையில் மற்றொரு கூட்­டமும் இடம்­பெ­று­கின்­றன.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கக்­கோரி எதிர்க்­கட்­சியின் பொது எதி­ர­ணி­யினர் இன்று கொழும்பில் கங்­கா­ராமை முத்­தையா மைதா­னத்தில் எதிர்ப்பு பேர­ணிக்­கூட்டம் நடத்­த­வுள்­ளனர்.

அர­சாங்க பங்­கா­ளிக்­கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­ம­யவின் இணைத்­த­லைவர் அது­ர­லிய ரத்ன தேரர் மற்றும் கோட்டை நாக விகா­ரையின் விகா­ரா­தி­பதி மாது­லு­வாவே சோபித தேரரின் தலை­மையில் ஏற்­பாடு செய்­தி­ருக்கும் இவ் எதிர்ப்பு கூட்டத்தில் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­னர்கள், மக்கள் விடு­தலை முன்­னணி, ஜன­நா­யக கட்சி, ஜன­நா­யக மக்கள் முன்­னணி உள்­ளிட்ட அனைத்து எதிர்க்­கட்­சி­யினரும் பங்கேற்கவுள்ளனர்.

சட்­டத்­த­ர­ணிகள் சங்கம், சுதந்­திர ஊடக மையம், ஜன­நா­ய­கத்­திற்­கான தேசிய இயக்கம், சமகி இயக்கம் ஆகிய அமைப்­புக்­களும் கலந்து கொள்­வ­துடன், அர­சாங்­கத்தின் பிர­தான பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான ஜாதிக ஹெல உறு­மய, இட­து­சாரி மக்கள் முன்­னணி, சோச­லி­சக்­கட்சி ஆகிய கட்­சி­களும் இணைந்து கொள்­கின்­றன.

இன்று பிற்­பகல் மூன்று மணிக்கு முத்­தையா மைதா­னத்தில் இடம்­பெறும் இக்­கூட்­டத்­தில் ஐயா­யி­ரத்­துக்கு அதி­க­மான மக்கள் கலந்து கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அதேபோல் பொது எதி­ர­ணியில் ஒன்­றி­ணைந்து நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­ககுமாறு ஜனா­தி­ப­திக்கு தெரி­விக்­க­வுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி தமது கோரிக்­கை­யினை ஏற்று அர­சியல் அமைப்பு மாற்­றத்­திற்கு இணங்­கா­விடின் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் அரசை வீழ்த்த பொது எதி­ர­ணி­யினை உரு­வாக்­கு­வ­தா­கவும் எதிர்க்­கட்­சி­களின் பொது எதி­ர­ணி­யினர் இணங்­கி­யுள்­ளனர்.

ஆத­ரவு கூட்டம்

இதே­வேளை ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வது அடுத்­த­வொரு தீவி­ர­வா­தத்­திற்கு வித்­திடும் எனக்­ கு­றிப்­பிட்டு அர­சாங்­கத்­தினை வலுப்­ப­டுத்த அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆத­ரவு தெரி­விக்கும் வகையில் அமைச்சர் விமல் வீர­வன்ச தலை­மையில் தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்­தினால் இன்று கொழும்பு சுக­த­தாச உள்ளரங்கில் அரச ஆத­ரவு கூட்டமொன்று இடம்­பெ­று­கின்­றது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக்ச அர­சாங்­கமே வெற்றி பெற வேண்டி பல வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் அதேபோல் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­காது ஜனா­தி­ப­தியை பலப்­ப­டுத்­தவும் அமைச்சர்களான விமல் வீர­வன்ச, தினேஸ் குண­வர்த்­தன மற்றும் தேசிய சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்கள் , தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கத்தினர், பொதுபல சேனா அமைப்பினர், சிங்­கள ராவய அமைப்பினர் உள்­ளிட்ட பெருளவானோர் இந்தக் கூட்டததில் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் இக்கூட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டாலி சம்பிக் ரணவக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தாம் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.