நாட்டில் 84,248 பேர் மலசலகூடத்தை பயன்படுத்துவதில்லை
நாட்டில் 5,188,047 வீட்டு உரிமையாளர்கள் இருக்கின்றனர் என்றும் அவர்களில் 84,248 பேர் மலசலகூடத்தை பயன்படுத்துவதில்லை எனவும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
5,188,047 வீட்டு உரிமையாளர்களில் வீட்டு உரிமையாளர்கள் மாத்திரம் 1,698,474 மலசல கூடங்களை பயன்படுத்துவதாகவும் வேறு குடித்தனத்துடன் சேர்ந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 113,362 ஆகும்.
உலக மலசலகூட தினம் நேற்று 19ஆம் திகதியாகும். இந்நிலையிலேயே மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் 2012ஆம் ஆண்டுக்கான தரவுகளின் பிரகாரம்,
மேல் மாகாணத்தில், கொழும்பு மாவட்டத்தில் 574 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 775 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 746 பேருமாக மொத்தம் 2,095 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
மத்திய மாகாணத்தை பொறுத்தவரை கண்டி மாவட்டத்தில் 1,591 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 666 பேரும் நுவரெலியா மாவட்டத்தில 6,500 பேருமாக மொத்தம் 8757 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
தென் மாகாணத்தில், காலி மாவட்டத்தில் 1,008 பேரும் மாத்தறை மாவட்டத்தில 402 பேரும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 600 பேருமாக மொத்தம் 2,010 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
வட மாகாணத்தில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7,235 பேரும் மன்னார் மாவட்டத்தில் 2,397 பேரும் வவுனியா மாவட்டத்தில் 4,018 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4,967 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6,300 பேரும் மொத்தம் 24,917 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 16,868 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 4,233 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 3,491 பேருமாக மொத்தம் 24,592 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் 4,331 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 6,426 பேருமாக மொத்தம் 10,757 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம் மாவட்டத்தில் 5,042 பேரும் பொலநறுவை மாவட்டத்தில் 2,082 பேருமாக மொத்தம் 7,124 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் 2,079 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 2,212 பேருமாக மொத்தம் 4, 291பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
சப்ரகமுவ மாகாணத்தில், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,532 பேரும் கேகாலை மாவட்டத்தில். 1,173 பேருமாக 2,705 பேர் பயன்படுத்துவதில்லை.
வட மாகாணத்திலேயே அதிகளவானோர் (24,917) மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை எனவும் கிழக்கு மாகாணம் இரண்டாவதாக (24,592) காணப்படுவதாகவும் இப்புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
.jpg)
Post a Comment