Header Ads



மஹிந்தவுக்கு '69' - தெவட்டஹக பள்ளிவாசலில் விஷேட துஆ பிரார்த்தனை (படங்கள்)


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு நல்லாசி வேண்டி இஸ்லாமிய சமய நிகழ்வு ஒன்று இன்று (18) தெவட்டஹக பள்ளி வாசலில் இடம் பெற்றது.

மேற்படி நிகழ்வினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், ஜனாதிபதி காரியாலய முஸ்லிம் அலுவலர்கள் மற்றும் ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் கலாநிதி ஹஸன் மௌலானா ஆகியோரின் ஏற்பாட்டில் தெவட்டஹக பள்ளிவாசலின் தலைவர் றியாஸ் ஷாலி தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வில் சிரேஷ்ட்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, மேல்மாகாண ஆளுநர் அஷ்ஷெய்யத் அலவி மௌலானா, ஜனாதிபதிக் காரியாலயத்தின் ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் ஹேமசிறி ஜெயலத், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேல்மாகாண அமைப்பாளர் பௌஸான் அன்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

விஷேட துஆ பிரார்த்தனைகளை கலாநிதி ஹஸன் மௌலானா மற்றும் தெவட்டஹக பள்ளி பிரதம இமாம் மௌலவி முஹர்றம் ஆகியோர் நிகழ்த்தினர்.


9 comments:

  1. MAARKATHTHAI KASUKKU VETHTHA KOOTTAM

    ReplyDelete
  2. அட கேடு கெட்டவனுகளா, நீங்க திருந்தவே மாட்டிங்களா? இன்றைய இளைஞ்சர்களின் பொறுமையினால் தான் இவர்கள் இப்படி ஆட்டம் போடுகிறார்கள். என்ன செய்வது கையாலாகாத சமுகமகிவிட்டோம் ?அல்லாஹ்வின் சாபம் உங்கள் மீது உண்டாகட்டும்.

    ReplyDelete
  3. செருப்பால் அடித்து துரத்த வேண்டின்ய கூட்டம். பள்ளிகளை உடைப்பவனுக்கு பள்ளியில் துஹா பிரார்த்தனை ??

    ReplyDelete
  4. இது தனது உடன் பிறப்புகளை மஹிந்தவுக்கு கூட்டிகொடுபதக்கு சமன்...

    எமது உம்மத்திக்கு இந்த அரசாங்கம் செய்த துரோகம்கள் கொஜ்ஜனஞ்சமல்ல.

    ReplyDelete
  5. இந்த ஹஸன் மௌலானா எந்தக் கல்லூரியில் பட்டப் படிப்பை மேற்கொண்டு கலாநிதி ஆனார் என்ற தகவல் தெரிந்தவர்கள் அறியத் தரவும். முன்னர் ஹன் மௌலானா என்றே எழுதுவது வழக்கம்.

    ReplyDelete
  6. நன்றாகவே துஆக் கேளுங்கள். இந்த அரசாங்கம் தோல்வியுற்றால் இவர்களில் பலர் வீட்டிலே நன்றாக குரட்டை விட்டு உறங்கவேண்டியது தான். சமுதாயத்துக்கு எந்தத் தேவையுமற்ற இவர்கள் தான் முஸ்லிம் தலைகள். முஸ்லிம்களின் உரிமைகளை சூறையாடும், பொருளாதாரத்தை நசுக்கி நாசமாக்க திட்டம் தீட்டும், பல முஸ்லிம் இளைஞர்கள் கொலை செய்யப்படவும், வீடுகள் எரித்து நாசமாக்கப்படவும், மாற்று மதத்தினருக்கு மத்தியில் துவேச உணர்வை ஊட்ட வித்திடவும் வரிந்து கட்டிக்கொண்டு பகிரங்கமாகவே குர்அனையும் இஸ்லாத்தையும் குறை கூறிய ஞானசாரருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காது அண்ணனுடன் சேர்ந்து உரமூட்டி வளர்க்கும் இந்த ஜனாதிபதிக்காகப் பிரார்த்தனை செய்கிறீர்களே. நீங்கள் நயவஞ்சகர்களே தான்.

    ReplyDelete
  7. Inshallah we will try to establish THAWHEED

    ReplyDelete

Powered by Blogger.