மஹிந்தவுக்கு 3 தடவைகள் முடியும் என்ற தீர்மானத்தை அலரி மாளிகையே மேற்கொண்டது - JVP
ஜனாதிபதி மூன்றாம் தவணைக்கு போட்டியிட முடியுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கமானது, உச்ச நீதிமன்றினால் எடுக்கப்படவில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
மூன்று தடவைகள் ஜனாதிபதி மஹிந்த போட்டியிட முடியும் எனக் கூறி உச்ச நீதிமன்றம் அளித்த சட்ட விளக்கமானது அலரி மாளிகையில் எடுக்கப்பட்டது ஜே.வி.பி.யின் வட மத்திய மாகாண உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தவணை போட்டியிடுவது தொடர்பில் சந்தேகம் நிலவிய காரணத்தினால் ஜனாதிபதி உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி மஹிந்தவின் நிலைப்பாட்டை நாட்டின் நிலைப்பாடாக மாற்றும் முயற்சியே இதுவாகும்.
நீதிமன்றின் தீர்ப்பு ஜனநாயகமானதல்ல. ஒரு தலைப்பட்சமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட விளக்கத்தை நீதிமன்றம் அளித்திருக்க வேண்டும். சட்டத்தை விளக்கத்தை கோரிய ஜனாதிபதியே விளக்கத்தையும் அளித்துள்ளார்.
இந்த சட்ட விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நாட்டு மக்களுக்கு அவசரமான ஜனாதிபதி தேர்தல் ஒன்று அவசியமில்லை.
அவசரமாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மட்டுமே காணப்படுகின்றது.
இதுவரையில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து தீர்மானிக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் மிகவும் பொருத்தமான அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க எதிர்பார்ப்பதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment