Header Ads



மைத்திரிபால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் 2 வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் - ரணில்

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ தமது கட்சி உடன்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற முறையை உறுதிப்படுத்தவும், நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்லக்கூடிய பிரதமர் ஒருவரை தெரிவு செய்யும் வகையில் இந்த செயற்பாட்டை தாம் ஏற்றுக்கொண்டதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை,  புதிய ஆண்டில் புதிய அரசாங்கத்துடன் தமது பயணத்தை ஆரம்பிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகோத்தாவில் நேற்று உரையாற்றிய அவர் மைத்திரிபாலவின் துணிச்சலான முடிவை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ரணில் கேட்டுக்கொண்டார்.

தேசிய அரசாங்கம் ஒன்றின் மூலம் இலங்கை நாட்டின் நலன் கருதிய செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்.

தாம், மஹிந்த ராஜபக்சவின் பழைய அரசியலை தொடர விரும்பவில்லை என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.