Header Ads



காலம் கடந்தாவது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஞானம் பிறந்துள்ளது - பொதுபல சேனா

பொதுபலசேனாவின் கருத்துக்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து ஐ.தே. கட்சியின் நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாகவும் அரசியல் கட்சிகளையும் அமைப்புக்களையும் ஓர் அணிக்கு கொண்டு வருவதே தமது நோக்கமாகுமென்றும் ஐ.தே. கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக தெரிவித்துள்ளார்.

காலம் கடந்தாவது ஐ.தே. கட்சிக்கு ஞானம் பிறந்துள்ளதை வரவேற்கின்றோம் என இது தொடர்பில் பொதுபலசேனா தெரிவித்தது.

இது தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவிக்கையில்,

பொதுபல சேனாவின் பகிரங்க அழைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளோம்.

முதலில் அவர்கள் முன்வைக்கும் யோசனைகளை நன்கு ஆராய வேண்டும். அனைவரையும் ஓரணியில் திரட்டிய அரசியல் சக்தியை கட்டியெழுப்புவதே எமது முயற்சியாகும்.

அடுத்ததாக பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறலாம். அது எதுவாக இருந்தாலும் அனைத்து தரப்பினரையும் ஒரே மேடைக்கு கொண்டு வந்து நாட்டுக்காக  ஒரு அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறானதோர் நிலையில் பொது பல சேனாவின்  கருத்துக்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து எமது நிலைப்பாட்டை வெளியிடுவோம். 

பொதுபலசேனா உட்பட வேறு அமைப்புக்களினது யோசனைகளையும் உள்வாங்கிக் கொண்டு பொது நிகழ்ச்சி நிரலை தயாரிப்போம் என்றும் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பொது பல சேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகேயிடம் கேட்ட போது கடந்த காலங்களில் ஐ.தே. கட்சியில் பலர் எம்மை கடுமையாக  விமர்சித்தார்கள். எமது கொள்கைகளை பிழையென்றார்கள்.

ஆனால், இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க எம்மோடு பேசத் தயார் என தெரிவித்துள்ளமையை வரவேற்கின்றோம். காலம் கடந்தாவது ஐ.தே. கட்சிக்கு ஞானம் பிறந்தது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.

No comments

Powered by Blogger.