யாழ்ப்பாண முஸ்லீம்களை பரச்சேரி பிரதேச காணிகளில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை
(பாறுக் சிகான்)
பரச்சேரி பிரதேச காணிகளில் மீண்டும் முஸ்லீம்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினருமான பி.எஸ்.எம் சுபியான் மௌலவி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த யாழ் முஸ்லீம்கள் ஏற்கனவே குடியேறி வாழ்ந்த பிரதேமாக பரச்சேரி பிரதேசம் உள்ளது.
இதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியமர தற்போது விருப்பம் தெரிவித்துள்ளனர்.ஆனால் அவ்விடத்தில் விவசாய செய்யும் காணி என கூறி விவசாய அமைப்புகள்,அது சார்ந்த சம்மேளனங்கள் மக்களை மீளக்குடியேற விடாமல் தடுத்து வருகின்றன.
இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்ததை அடுத்து அங்கு சென்று பார்வையிட்டேன்.மக்கள் பக்கம் தான் நியாயமான காரணங்கள் உள்ளன.அதனை அடுத்து இக்காணி மீளவும் அம்மக்களுக்கு கிடைப்பதற்கு நான் சம்பந்தப்பட்ட தரப்புடன் கலந்துரையாடியுள்ளேன்.
தவிர அமைச்சர்களான பஸில் ராஜபக்ஸ,கே.என் டக்ளஸ் தேவானந்தா,ரிசாட் பதியுதீன் ஆகியோருக்கு இக்காணி பிரச்சினை குறித்து அறிவித்துள்ளேன்.
இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் என அவர் மேலும் தனது கருத்தில் தெரிவித்தார்.
Post a Comment