Header Ads



வசதியற்ற முஸ்லிம்களும் ஹஜ் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன் - மஹிந்த

இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித ஹஜ் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கப் போவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி 28-10-2014 திருகோணமலையில் நடைபெற்ற பல்வேறு வைபவங்களில் கலந்து கொண்டார். மூதூர் பிரதேசத்திற்கும் விஜயம் செய்திருந்தார்.

அங்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு வாக்குறுதி அளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை தெரிவிக்கின்றது.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, தற்போது வசதியுள்ள முஸ்லிம்கள் மட்டுமே ஹஜ்ஜுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். எனினும் எதிர்காலத்தில் ஹஜ்ஜுக்குச் செல்வதற்கான வாய்ப்பை எனது தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்தித்தரும்.

இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் பொருளாதார பலம் சில வருடங்களுக்குள் அதிகரிக்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன் காரணமாக இன்னும் சில வருடங்கள் கழிந்தால் வசதியற்றவர்கள் என்று யாரும் இலங்கையில் இருக்க மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 comments:

  1. "கிழிஞ்சி லங்காட லுங்கி" உலகிலேயே மிகவும் நம்பக தன்மையற்ற ஒரு தலைவர். இலங்கை வரலாற்றில் படு மோசமான துவேசமான அரசியல் தலைவர் என்றால் இவர்தான் என மக்கள் கதைத்துக் கொள்கிறார்கள்.

    ReplyDelete
  2. அளுத்கமயில் பயங்கரவாதிகள் எம்மைத்தாக்கும்போதும். ஏனைய பள்ளிவாசல்களை தாக்கும்போதும். ஞானசார அல்குர் ஆனை இழிவு படுத்தும்போதும் ஒரு வார்த்தை கூட மாற்று மதத்தவர்களை இழிவு படுத்தக்கூடாது ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தவர்கள். இன்று அனைத்து முஸ்லிம்களும் ஹஜ் செய்ய உதவி செய்வார்களாம். இது மக்களை முட்டாள்காளாக்கும் செயல் என்பதை விட நீர் எந்தளவு முட்டாளாக இருக்கின்றீர் என்பதை காட்டுவதாகவே உள்ளது. எல்லாவற்றிற்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன். கடந்த காலத்தில் உமது ஆட்சியில் உம்மால் இறையில்லங்களும் அவனது தூய வசனங்களுமான குர் ஆனும் இழிவு படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அது உமக்கும் இறைவனுக்கும் இடையிலுள்ளது. அவன் என்ன நாடியுள்ளானோ அதை திட்டவட்டமாக செய்வான் எமது பிரார்த்தனைகள் ஒருபோதும் வீண்டிக்கப்படமாட்டாது என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு. அதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    ReplyDelete
  3. Rajapaksa is a big lier.Don't trust any more.he may think to compare muslim socity to Buddist.Mr Rajapaksa we belive almighty ALLAH not you.time to good bye..

    ReplyDelete
  4. athaulla,resaad,hakeem,baseer,hisbu,yls,a/ali,.... poondra nandry ulla.... erukkum varai.neengal yeththanai uorai koliththi naalum, yeththanai palliyai koliththi naalum,
    yeththanai BBS vathalum, penkalin habaai kalattinalum. [HAMBAYAGE THAMBILAGEE VODE OBATAMAI] kakka maarin vode .........l

    ReplyDelete
  5. its really tooooooooooooooomuch if they bring total budget they cannot send one district total Muslims, no need haj srilankan muslims peace & peoples need proper meals try to reduce cost of living in srilanka its enough, seems to be they are going to loss the up coming election v/badly,

    ReplyDelete
  6. கஷ்டப்பட்டு சம்பாதிக்க தேவை இல்லை மஹிதகு vote பண்ணினால் எல்லாரும் சும்மா செல்வந்தராவார்கலாம்
    தலைவருக்கு தெரியாது ஹஜ் கடமை வசதி படைத்த செல்வந்தருக்கு மட்டும் தான் கடமை என்று அவருட பணத்தில் காசிக்கு தான் அனுப்ப முடியும் புனித மக்காவிக்கு வேன்றும் என்றால் அஸ்வரும் காதரும் போவார்கள்

    ReplyDelete
  7. வசதி அற்றவர்களுக்கு ஹஜ் கடமையல்ல. முஸ்லிம்களை ஏமாற்றி வெற்றி பெறுவதற்கான முயற்சி.

    ReplyDelete
  8. Ealaikalukku Punitha Haj Kadamai Illai, Oru Muslim Thanathu Sontha Panathil than Haj Niravetta Vendum Entra Nipanthanaikalai Koodithiriun Azwer Haji Chollik kodukka Villaya????

    ReplyDelete

Powered by Blogger.