“மஹிந்தவிற்கு மூன்று தடவைகள் முடியாது”
சட்டவிரோதமான ஜனாதிபதி தேர்தல் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் ஜே.வி.பி கட்சி நாடு முழுவதிலும் கருத்தரங்குகளை நடாத்த உள்ளது.
நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியல் அமைப்பை மீறி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட முயற்சிக்கின்றார்.
இது குறித்து மக்களுக்கு பூரண விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக நாடு முழுவதிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட உள்ளனது.
மேலும் பிரதான நகரங்களில் துண்டுப் பிரசூரங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
“மஹிந்தவிற்கு மூன்று தடவைகள் முடியாது – சட்டவிரோத ஜனாதிபதி தேர்தல் வேண்டாம்” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் ஜே.வி.பி மக்களை விழிப்புணர்வடையச் செய்யும் என கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தயங்கப் போவதில்லை என கட்சி அறிவித்துள்ளது.

Post a Comment