ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி அனைத்து இன மக்களுக்கும் நன்மைகளை ஏற்படுத்தும்
ஆட்சியாளர்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது மிகவும் தீர்மானம் மிக்கதோர் சந்தர்ப்பமாகும், இந்த வேளையில் பொறுப்புணர்ச்சியின்றி செயற்பட முடியாது.
இனங்களுக்கு இடையில் பல்வேறு வழிகளில் முரண்பாடுகளையும் பிரிவினையையும் இந்தளவுக்கு வேறு எந்தவொரு அரசாங்கமும் ஏற்படுத்தவில்லை.
அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசாங்கமொன்று தேவைப்படுகின்றது.
அனைத்து இனங்களும் ஒன்றிணைய வேண்டுமென்ற கொள்கையை ஐக்கிய தேசியக் கட்சியே முன்வைத்தது.
இனவாதம் மதவாதம் இல்லாத ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே எதிர்கால தலைமுறையினருக்கு நன்மைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஆட்சி நடாத்த முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி அனைத்து இன மக்களுக்கும் நன்மைகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)
உண்மைதான் வேறு எந்த ஆட்சியிலும் இப்படியொரு மோசமான நிலைமையை நாடு எதிர் நோக்கியிருக்கவில்லை. இனிமேலும் இன்னிலைக்கு நாட்டையும் நாட்டு மக்களையும் தள்ளிவிடாமல் பாதுகாக்கவேண்டியது நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகவே இன்று கருதவேண்டியுள்ளது.
ReplyDeleteஒரு நாணயமான நம்பகத்தன்மையுள்ள கெளரவமான ஒரு அரசியல் வாதி. உண்மையான பேச்சு. உங்களை போன்றவர்கள் தற்போதைய நிலைமையில் தீவிர அரசியலில் இறங்க வேண்டும்.
ReplyDelete