Header Ads



'இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்த, ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்'

ஜனாதிபதித் தேர்தல் எமக்கு சவால் அல்ல. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்து மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதிப் பதவியில் அமர்த்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். வாக்களித்த ஏனைய பொது மக்களின் இந்த அர்ப்பணிப்பை ஒருபோதும் மறக்க மாட்டோம். நாட்டின் இனப் பிரச்சினையைத் தீர்த்து இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார் என பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்திருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் இந்த அரசாங்கத்தை நாம் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபுர்வ இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட பிரதிநிதிகளுக்கான விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்சியின் செயற்பாட்டாளர்களான நீங்கள் வழங்கிய சக்தி மற்றும் பொது மக்கள் எமது கட்சிக்கு வாக்களித்ததன் காரணமாகவே அவரால் இந்தப் பணியை மேற்கொள்ள முடிந்தது. உங்களது மற்றும் வாக்களித்த ஏனைய பொது மக்களின் இந்த அர்ப்பணிப்பை ஒருபோதும் மறக்க மாட்டோம். நாட்டின் இனப் பிரச்சினையைத் தீர்த்து இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதித் தேர்தல் பற்றிப் பேசப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் திகதி இதுவரை அறிவிக்கப்படாவிட்டாலும் எமது அரசாங்கம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை அடையும் என இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதற்காக, கட்சியின் செயற்பாட்டாளர்களைத் தௌிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்சியின் உயர்மட்ட செயற்பாட்டாளர்களில் இருந்து கீழ் மட்ட செயற்பாட்டாளர்கள் வரை அனைவரும் இந்த ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு தமது பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் எமக்கு சவால் அல்ல. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்து மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதிப் பதவியில் அமர்த்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

எமது கட்சியை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட செயற்பாட்டு அலுவலகம் கண்டி நகரில் இம்மாதம் 28 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. அதனோடு இணையான வகையில் தேர்தல் தொகுதி மற்றும் கிராம சேவைகர் பிரிவு மட்டத்தில் கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்க் கட்சியினர் எவ்வகையான குற்றச் சாட்டுக்களைச் சுமத்தினாலும் ஜனாதிபதி ஆரம்பித்து செயற்படுத்திவரும் அபிவிருத்தித் திட்டங்களை எந்தவகையிலும் நிறுத்த முடியாதெனவும் குறிப்பிட்டார்.s

1 comment:

  1. செயல்படத்தானே வேண்டும். இனங்களுக்குள் மோதலை உண்டு பண்ணி இலாபம் கண்டார்கள். தேர்தல் வரும்போது இனங்களுக்குள் நல் இணக்கம் கொண்டுவர பாடு படுபவராக சிறுபான்மையினருக்கும். இது பெளத்த நாடு என்று பெளதர்களுக்கும் இரு தலைகாட்டித்தான் காலம் கழிக்கவேண்டும

    ReplyDelete

Powered by Blogger.