''ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது, பயனற்ற செயல்'' என ரவூப் ஹக்கீம் கூறினாரா..?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றி உறுதியாகிவிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தமக்கு நெருக்கமானவர்களிடம் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ரயில் பாதையில் தலையை வைத்துக்கொள்ளத் தயாரில்லை.
கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்கு ஆதரளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால், ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றி நிச்சயமாகிவிடும்.
எனவே, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது பயனற்ற செயலாகும்.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து செயற்படக் கூடிய ஒர் தலைவர் பொது வேட்பாளராக போட்டியிட்டால் ஆதரவளிப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவினை திரட்டும் முயற்சிகளில் ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஹகீம் தலைவராக இருக்கும் வரை நமது உரிமைகளுக்காக எதுவும் செய்யவுமாட்டார், மக்களுக்கு எந்த அபிவிருத்தியும் செய்யவுமாட்டார். அவரும் அவரது பினாமிகளும் தங்களது சுயநலத்துக்காக முஸ்லிம் மக்களை இந்த நாட்டு பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து தனிமை படுத்தி முஸ்லிம் மக்களின் தார்மிக உரிமை போராட்டத்தை கொச்சை படுத்தி சுயநல அரசியல் நடத்துகிறார்கள் என்று தன்மானம் உள்ள மக்களும் புத்தி ஜீவிகளும் கூறுகிறார்கள்.
ReplyDeleteஎதிர்கட்சி அரசியல் நடத்த பயப்படும் திரு. ஹக்கீம் அவர்களே, இத்தனை வருடமும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு எதை சாதித்தீர்கள்??????? நீங்கள் ரணில் விக்கரம சிங்கவை விமர்சிப்பது, மட்டமாக கதைப்பது, ஒரு அரசியல் சாணக்கியம் அற்ற செயல். அது ஐக்கிய தேசிய கட்சியின் சிங்களமக்களிடம், முஸ்லிம்கள் பற்றிய ஒரு வெறுப்பையும் காழ்புணர்சியையும் ஏற்படுத்தும். நீங்களும், உங்கள் தலைமைத்துவமும் ஒரு அவநம்பிக்கையை ஏனைய இனத்தவரிடமும், இனத்தளைவர்களிடமும் ஏற்படுத்தி உள்ளது என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.
முஸ்லிம் சமூகம் இந்த அரசாங்கத்தால் திட்ட மிட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன, நான் ஒரு முஸ்லிம் என்று சொல்லுவதற்கு அச்சப்படும் அளவுக்கு நிலைமை உருவாக்கப்பட்டது. முஸ்லிம்களின் இருப்புக்கு இந்த நாட்டில் கொஞ்சம் கொஞ்சம் ஆக திட்டமிட்டு, மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், இந்த ராஜபக்ச அன் கோ. அதையும் தாண்டி எதிர்காலத்தில் இந்த நாட்டில் முஸ்லிம் என்ற சமுதாயம், புத்த மதத்துக்கு எதிரானவர்கள். பெளத்த மதத்தை அழித்துவிடுவார்கள். என்ற மிகவும் ஆபத்தான கருத்தை திட்ட மிட்டு பெளத்த மக்களிடம் ( இளம் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை) பரப்பி வருகிறது. எனவே முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த ராஜபக்ச அன் கோ வை வீட்டுக்கு அனுப்புவதில் இருந்து, இந்த நாட்டு அனைத்து இன மக்களின் ஒற்றுமைக்காகவும் எந்த விலை கொடுத்தும் பாடுபட வேண்டும்.