தலை முடியை விரும்பி சாப்பிட்ட சிறுமி

பிரிட்டனை சேர்ந்த சிறுமியின் வயிற்றில் இருந்து, கத்தையாக தலை முடிகளை டாக்டர்கள் அகற்றி உள்ளனர். மிலி, 5, என்னும் அந்த சிறுமிக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, அவளது பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மிலியை பரிசோதித்த டாக்டர்கள், அவளது வயிற்றின் குடல் மற்றும் குடல் பாதைகளில், ஏதோ ஒன்று அடைத்து இருப்பதைக் கண்டனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, மிலியின் வயிற்றில் இருந்து, பந்து போன்று சுருண்டு கிடந்த தலைமுடியை அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்குப் பின், உடல்நலம் தேறிய மிலியிடம், டாக்டர்கள் விசாரித்தபோது, தலைமுடியை விரும்பி சாப்பிட்டதாக தெரிவித்தாள்.

No comments

Powered by Blogger.