Header Ads



சுதந்திரமான தேர்தலை நடாத்த, ஜனாதிபதி மஹிந்த பிரதான தடை - அனுரகுமார திஸாநாயக்க

சுதந்திரமான தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே பிரதான தடையாக இருக்கின்றார் என ஜே.வி.பி. கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபட்டு வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக சட்டத்தை மதித்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களை நடாத்த பிரதான தடையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே காணப்படுகின்றார் எனஅவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊவா மாகாணசபைத் தேர்தல்களை வெறுமனே ஓர் மாகாணசபைத் தேர்தலாக கருத முடியாது, ஜனாதிபதி தேர்தலுக்கான ஓர் முன்னோடி முயற்சியாகவே கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்தவின் நெருங்கிய உறவினரே ஆளும் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எனவும், இதனால் ராஜபக்ஸ அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்த இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிகாரத்தை முழு வீச்சில் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஊவா மாகாணத்தில் பீதியை கட்டவிழ்த்துவிட்டு அதன் மூலம் தேர்தல்களை வெற்றியீட்டும் முயற்சியல் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலக்கத் தகடற்ற வாகனங்கள், குண்டர் கூட்டம் என பல்வேறு வழிகளில் பிரதேச மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.