Header Ads



ஒசாமா பின் லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்கரின் சீருடை அருங்காட்சியத்தில் வைப்பு

நியுயோர்க்கில் இருக்கும் செப்டெம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் நினைவு அருங்காட்சிகத்தில் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லாடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க நேவி சீல் வீரரின் இராணுவ சீருடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ் தான் ஆபோதாபாத் நகரில் ஒசாமா பின் லாடனை கொன்ற அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது குறித்த வீரர் அணிந்திருந்த ஆடையே காட் சிக்கு வைக்கப்பட்டுள்ளது. குறித்த நேவி சீல் வீரர் ஒசாமா பின் லாடன் மீது மூன்று முறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலை நடத்திய வீரரின் பாதுகாப்பை கருதி அவரது அடையாளம் வெளியிடப் படவில்லை.

காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழுப்பு நிற இராணுவ சீருடையின் கைப்பகு தியில் கறுப்பு நிறத்தில் அமெரிக்க தேசிய கொடி பொறிக்கப்பட்டுள்ளது.

2001 செப்டெம்பர் 11 தாக்குதலில் இந்த உடை முக்கிய கதையை கூறுவதாக அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினர் கரொலின் மெலொனி குறிப்பிட்டார்.

இதில் பின்லான் கொல்லப்பட்ட அபோதாபாத் கட்டடத்தின் செங்கல் ஒன்றும் இந்த வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.