Header Ads



மனித குலத்தின் விமோசனத்திற்கே இஸ்லாம்..!

-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

மனிதனுடைய சன்மார்க்கம் உயிர் அறிவு ஆன்மா உடைமை கௌரவம் பரம்பரை போன்ற அடிப்படை அம்சங்களை போற்றி பாதுகாக்கின்ற அழகிய வாழ்வு நெறியே இஸ்லாமாகும்.

இஸ்லாம்மிய ஷரீஅத் சட்டங்கள் இத்தகைய அடிப்படை அம்சங்களை பேணிக் காக்கின்ற சாதகாமான சகல அமசங்களையும் போற்றியும் பாதகமான சகல அம்சங்களையும் தவிர்த்தும் சில அடிப்படையான ஆன்மீக லௌகீக கோட்பாட்டு இலக்குகளின் மீது கட்டி எழுப்பப்பட்ட மிகச் சிறந்த வாழ்வு நெறியாகும்.

இஸ்லாமிய "ஷரீஅத்" என்றாலே குரூரமான கசையடித்தல்  கை வெட்டல், கழுத்து வெட்டல், கல்லடித்துக் கொல்லுதல் என ஒரு பிழையான கலப்புனர்வுப் பரப்புரை சர்வதேச அளவில் மாத்திரமன்றி அண்மைக் காலமாக இலங்கையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதே போன்றே இஸ்லாமிய உம்மத்தினை நிர்வகிக்கின்ற கட்டமைப்பெனும் "கிலாபத்" எனும் பிரயோகம் குறித்தும் அது குரூரமான இஸ்லாமிய ஷரீஅத்துக் சட்டங்களை மனிதர்கள் மீது திணிக்கின்ற மனித உரிமைகளைப் பறிக்கின்ற ஆட்சிக் கட்டமைப்பு என்ற பரப்புரையும் உலகெங்கும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

மேலே சொன்ன ஷரீஅத்து, கிலாபத்து போன்ற பிரயோகங்கள் போன்றே "ஜிஹாத்" எனும் பிரயோகமும் முஸ்லிம் உம்மத்து குறித்த பீதியை ஜனரஞ்சகப் படுத்துவதற்காக திட்டமிட்ட அடிப்படையில் தவறான அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

ஜிஹாத் என்றால் முஸ்லிம் அல்லாதவர்களை கொன்று குவித்தல், இஸ்லாத்தை பலாத்காரமாக அடுத்தவர் மிது திணித்தல், தேசங்களை ஆக்கிரமித்தல், வகை தொகையாக முரண்பட்டோர்களை கொன்று குவித்தல் என மிகவும் அகோரமான காட்சிப்படுத்தல்களை வெகுசனமயப்படுத்தல் மேற்கொள்ளப்பய்ட்டு வருகிறது.

உண்மையில் மேலே சொன்ன அனைத்து பாதகமான கோட்பாடுகளையும் மேலைத்தேய மேலாதிக்க யூத சியோனிஸ சிலுவை சக்திகள் உலகின் மூளை முடுக்குகளில் எல்லாம் அரங்கேற்றியதோடு உலகெங்கும் ஆயுத கலாசாரத்தை போரை அழிவுகளை விதைத்தும் சகல அரசியல் பொருளாதார இராஜதந்திர இராணுவ மூலோபாயங்களையும் அத்தகைய ஆக்கிரமிப்புக் காலனித்துவத்தினை மையப்படுத்தியுமே நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

ஒரு மனித உயிரின் பெறுமதி  மொத்த மனித வர்க்கத்தினதும் பெருமதியிற்கு ஈடாகுமென அடிப்படை வழக்கைத் தத்துவத்தை உலகில் அல் குரான் அன்றி வேறு எந்த மார்க்கமும் தெளிவாக ஒரு கோட்பாட்டுச் சிந்தனையை முன்வைக்க வில்லை.

தனி மனிதர்களாகவும், குடும்பங்களாகவும், கோத்திரங்களாகவும், சமூகங்களாகவும், தேசங்களாகவும் மனித வாழ்வின் அடிப்படை இலக்குகளை பேணுகின்ற பொதுவான விதிகளையே இஸ்லாமிய ஷரீஅத் கிலாபத் ஜிஹாத் ஆகிய பிரயோகங்கள் உள்ளடக்கியிருக்கின்றன.

அத்தகைய அடிப்படை கோட்பாடுகளுடன் மானுட விழுமியங்களுக்கு முரண்படுகின்ற மனித வாழ்வின் அழகிய கட்டமைப்பினை சிதைக்கின்ற தீய அம்சங்கள் களையப்படுகின்ற அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் படுகின்ற சட்ட திட்டங்கள் யாவும் விதிவிலக்கான அரிதிலும் அரிய அம்சங்களாகும்.

ஆனால் அண்மைக் காலமாக உலக அரங்கில் இஸ்லாமிய கிலாபத்து, இஸ்லாமிய ஷரீஅத்து ,இஸ்லாமிய ஜிஹாது ஆகிய மூன்று பிரதான பிரயோகங்களுக்கும் விதிவிலக்கான விவகாரங்களை பூதாகரப் படுத்தி அவற்றை அடிப்படை வாதமாக ,தீவிரவாதாமாக, இஸ்லாமிய பயங்கரவாதமாக இஸ்லாமிய தேச அடையாளங்களுடன் காட்சிப் படுத்தி உள்வீட்டு மோதல்களாக அரங்கேற்றி  இஸ்லாமோபோபியா எனும் இஸ்லாம் முஸ்லிம்கள் குறித்து பீதியை கிளப்புகின்ற நடை முறை வியாக்கியானங்கள் உலகின் முன் வைக்கப்படுகின்றன.

புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் தேசங்களில் உள்ள எண்ணெய் மற்றும் கனிய வளங்களை ஆக்கிரமிக்கும் நவீன காலனித்துவத்தை பரந்து விரிந்த சியோனிஸ சாம்ராஜயத்தை தோற்றுவிப்பதன் மூலமும், நவயுக சிலுவைப் போரை ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு விஸ்தரிப்பதன் மூலமும் மூன்றமுலக பேரழிவை முஸ்லிம் உம்மத்தின் மீது திணிக்க முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்கில் யூத சியோனிஸ சிலுவை பனிப்போர்கள் அரபு வசந்த காவு கொள்கைக்கு பின்னர் உள்வீட்டில் முடுக்கிவிடப்பட்டுள்ள அதேவேளை ஆசிய நாடுகளில் இந்துக்களையும் பௌத்தர்களையும் முஸ்லிம் உம்மத்துடன் மோதவைக்கும் முஸ்தீபுகளும் தீவிரமாக அசுர வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா இலங்கை உற்பட இந்தோனேசியா வரை இந்தக் கொடூரமான காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளதாக இஸ்லாமோபோபியா பரப்புரைகள் அமுலாக்க அரங்கேற்றங்களோடு அசுர வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகில் உள்ள எந்த  அணுகுண்டிற்கும் இஸ்லாமியர்கள் உரிமை கோரவில்லை,உலகில் பறக்கும் யுத்த விமானங்கள், நாசகாரி கப்பல்கள், உயிரியல்,இரசாயண ஆயுதங்கள் உற்பட முஸ்லிம் உலக முரண்பாட்டு முகாம்கள் காவித் திரியும்  அத்தனைஆயுதங்களும் ஆயுதக் கிடங்குகளும் முஸ்லிம் உலக எதிரிகளின் தயாரிப்புக்களாகும்.

உலகில் உள்ள சுமார்  65 ஆயுத உற்பத்தி நிறுவனங்களும் யூதர்களால் நடாத்தப்படுகின்றன, 95 % ஊடக நிறுவனங்களும் அவர்களது ஆயுத கலாசாரத்தை சந்தைப்படுத்துவதற்காக நடாத்தப் படுகின்றன..அந்த ஊடகங்களும் ஊதுகுழல்களும் தான் இன்றைய  நவீன உலகின் இல்ச்சமிய கிலாபாத்தையும், இஸ்லாமிய ஷரீஅத்தையும் இஸ்லாமிய ஜிஹாதையும் நடை முறையில் வியாக்கியானம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும்,இளைஞனும் யுவதியும் இஸ்லாத்தின் பாலும், முஸ்லிம் உம்மத்தின் பாலும், முழு மனித குலத்தின் பாலும் தமக்குள்ள பங்களிப்பை, தாம் இருக்கும் இடத்தில் தேசத்தில் இருந்தவாறு அறிவுடனும் தெளிவுடனும் அவதானத்துடனும் மேற்கொள்கின்ற அறப்பணியிற்காக அழைக்கப்படுகின்றனர்.

1 comment:

  1. தனி மனிதர்களாகவும், குடும்பங்களாகவும், கோத்திரங்களாகவும், சமூகங்களாகவும், தேசங்களாகவும் மனித வாழ்வின் அடிப்படை இலக்குகளை பேணுகின்ற பொதுவான விதிகளையே இஸ்லாமிய ஷரீஅத் கிலாபத் ஜிஹாத் ஆகிய பிரயோகங்கள் உள்ளடக்கியிருக்கின்றன.



    அத்தகைய அடிப்படை கோட்பாடுகளுடன் மானுட விழுமியங்களுக்கு முரண்படுகின்ற மனித வாழ்வின் அழகிய கட்டமைப்பினை சிதைக்கின்ற தீய அம்சங்கள் களையப்படுகின்ற அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் படுகின்ற குற்றவியல் சட்ட திட்டங்கள் யாவும் விதிவிலக்கான அரிதிலும் அரிய அம்சங்களாகும்.

    ReplyDelete

Powered by Blogger.