Header Ads



ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவமும், அதற்குத் தேவையான வாக்குகளும்

(நஜீப் பின் கபூர்)

ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பாக பல் வேறு விமர்சனங்களும் கணக்குகளும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அத்துடன் பெரும் பான்மைக் கட்சியில் போட்டி போட்டு வெற்றி பெற முடியாது என்று குதர்க்கம் பண்ணுபவர்கள் போலியான தகவல்களை முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் பரப்பி-பதுள்ளை முஸ்லிம் வாக்குப்பற்றி பிழையான கணக்குகளைச் சொல்லி மக்களைக் குழப்பி வருகின்றார். 

அவர் கணக்குப்படி பதுள்ளையில் 48000ம் முஸ்லிம் வாக்களர்கள் இருப்பதாக எழுத்து வடிவில் கொடுத்திருக்கின்றார்கள். மேலும் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புத் தொடர்பாகவும் இவர்கள் சமூகத்திற்கு கணக்குப் போட்டுக் காட்டி இருக்கின்றார். ஆனால் பதுள்ளை மாவட்ட மொத்த முஸ்லிம் குடித் தொகையே 47172 என்பதனை இவர்களுக்கு நாம் சொல்லி வைக்க வேண்டி இருக்கின்றது. இதன் உண்மைத் தன்மையை மாவட்ட செயலகத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

அவர்கள் கொடுக்கின்ற போலிக்க கணக்குகளின் படி பெரும்பான்மைக் கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற 30000ம் விருப்பு வாக்குகள் பெற வேண்டும் என்றும் அவர்கள் ஊடகங்களில் வழங்கி இருக்கின்ற அறிக்கையில்  சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால். 2004ல் நடந்த ஊவாத் தேர்தலில் 12356 விருப்பு வாக்குகளைப் பெற்று அமீர் முஹம்மட் வெற்றி பெறுகின்றார். அந்தத் தேர்தலில் ஐ.தே.க.வுக்குப் பிரதிநிதித்துவம் 11650 வாக்குகளுக்குக் கூடக் கிடைத்திருக்கின்றது. 

2004ல் நடந்த தேர்தலில் பதுள்ளையில் ஆளும் தரப்பில் போட்டியிட்ட மதார் சஹிப் 17345 வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுகின்றார். இந்தத் தேர்தலில்  ஆளும் தரப்பில் உறுப்புரிமை பெற 13446 விருப்பு வாக்குகள்கூடப் போதுமாக இருந்தது. என்பது அரசியல் செய்கின்ற இவர்களுக்குப் புரியாமல் இருக்கின்றது.

அதே போன்று 2009ல் நடந்த தேர்தலிலும் 11220 விருப்பு வாக்குகளுக்கு பிரதிநித்துவம் கிடைத்திருக்கின்றது. இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அமீர் முஹம்மட் என்பவர் 10676 வாக்குகளைப் பெற்று முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அங்கு இழக்கின்றார். அவருக்கு இன்னும் வெறும் 544 வாக்குகள் கிடைத்திருந்தால் அவர் உறுப்புரிமை பெற்றிருப்பார். இவற்றை தேர்தல் புள்ளிவிபரங்களைப் பார்க்கின்ற எவருக்கும் புரிந்து கொள்ள முடியும்.

2009ல் நடந்த தேர்தலில்  பதுள்ளையில் மு.கா. போட்டியிட்டு 4150 வாக்குகளைப் பெற்றிருக்கின்றது. மு.கா. இந்தத் தேர்தலில் புகுந்து முஸ்லிம் வாக்குகளைச் சிதறடிக்காது விட்டிருந்தால்  10676 வாக்குகளைப் பெற்ற  வேட்பாளர் அமீர் அன்று வெற்றி பெற்றிருப்பார். 

எனவே தங்களுக்கு மட்டுமே இந்தத் தேர்தலில் ஆசனங்கள் கிடைக்கும். பெரும்பான்மைக் கட்சிகளில் போட்டியிடுகின்ற முஸ்லிம்கள் எவரும் வெற்றி பெற மாட்டார்கள் என்பது அப்பட்டமான பொய் என்பதனை கடந்த காலத் தேர்தல் தொடர்பான புள்ளி விபரங்களைப் பார்க்கும் எவருக்கும் புரியும்.

மேலும் பிரதான கட்சிகளில் ஜனரஞ்சகமான வேட்பாளர்கள் தேர்தல்களில் நிற்கும் போது அந்தக் கட்சியில் போட்டியிடுகின்ற ஏனைய வேட்பாளர்கள் சிறு எண்ணிக்கையான விருப்பு வாக்குகளில் கூட உறுப்புரிமை பெற்றுக் கொள்ள முடியும் என்பதும் குறிப்படத்தக்கது. எனவே போலியான - பிழையான தகவல்களை வழங்கி அப்பாவி வாக்காளர்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கைகள் இன்று ஊவாவில் நடந்து வருகின்றது. 

எனவே விசமத்தனமான பிரச்சாரங்களை ஊவா குறிப்பாக பதுள்ளை முஸ்லிம்கள் நம்பக் கூடாது என்று அவர்களிடம் கேட்டுக் கொள்கன்றோம். வெற்றி வாய்ப்புள்ள உறுப்பினர்களுக்கு வாக்களித்து தமது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள ஊவா முஸ்லிம்கள் முனைய வேண்டும். 

வெற்றி பெற முடியாதவர்களுக்கு வழங்குகின்ற வாக்குகள் ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இந்தத் தேர்தலில் இல்லாமல் பண்ணிவிடும் என்பதனை இங்குள்ள முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உரிமைகள் பெற்றுத் தருகின்றோம் சலுகைகள் பெற்றுத் தருகின்றோம். சமூகத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம். வேலை வாய்ப்புப் வாங்கித் தருகின்றோம்  என்று பேசுவதெல்லாம் வெறும் பசப்பு வார்த்தைகள் என்பது இப்போது முஸ்லிம் சமூகம் கேட்டுப் புளித்துப் போன பழங்கதைகள்.    

1 comment:

  1. திரு. கபூர் அவர்களே, உங்களுது கருத்து வெற்றியை உறுதிபடுத்தாது. சிலநேரம் கிடைக்கும் சிலநேரம் கிடைக்காது. நிட்சயமாக மக்களை குளப்புவர்களில் நீங்கள் முதன்மையானவர் என்பதை உங்கள் கட்டுரையில் இருந்து விளங்க முடிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.