Header Ads



கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய அபூர்வமான பதில்..!

(Tm)

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர், 2010 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு வந்து, புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு, ஏப்ரல் மதம் 8 ஆம் திகதி புதிய அமைச்சரவை அமைத்தபோது, தனது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவை அரசியலுக்கு வருமாறு அழைத்தார்.

அத்துடன் எந்த அமைச்சு வேண்டும் என கேட்டதற்கு, தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை எனவும் நகர அபிவிருத்தி துறையினை தந்தால் தன்னால் சிறப்பாக செயற்பட முடியும் என கோட்டாபய கூறினார். 

இதனையடுத்து, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்டதுடன் அதன் செயலாளராக கோட்டாபய நியமிக்கப்பட்டார் என ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

450 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கொழும்பு மாநகரசபையிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இந்நிகழ்வு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில்  புதன்கிழமை (10) மாலை இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

தனது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷவை அரசியலுக்கு அழைக்குமாறு ஜனாதிபதி என்னிடம் கூறினார்.

ஜனாதிபதியின் விருப்பத்தை நான் கோட்டாபயவிடம் கூறியபோது, அதற்கு அவர் அளித்த பதில் மிகவும் அபூர்வமான ஒன்று.

உண்மையில் நான் இராணுவ அதிகாரி. அதன் காரணமாக நான் எனது கடமையை சரியாக செய்தேன். அதைவிட செய்வதற்கு எனக்கு வேறு ஒன்றுமில்லை. ஆனால் நகர அபிவிருத்தி துறை ஏதாவது கொடுத்தால் அதனை செய்து பார்க்கிறேன் என ஜனாதிபதியிடம் கூறுங்கள் என்று சொன்னார்.

உண்மையில் நான் இன்று மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் கூறியதை நான் ஜனாதிபதியிடம் சொன்னதும் அவர் மிகவும் விருப்பத்துடன், பாதுகாப்பு மற்றும் நகரஅபிவிருத்தி அதிகார அமைச்சினை உருவாக்குமாறு என்னிடம் கூறினார்.

நான் அன்று செய்தது மிகவும் சிறிய காரியம். ஜனாதிபதி சொன்னதை கோட்டாபயவிடம் கூறினேன்.  

அரசியலில் ஈடுபட விரும்பம் இல்லாத நிலையில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்ற கோட்டாபய, பதவியேற்ற நான்கரை ஆண்டுகளில் சிறப்பாக செயற்பட்டுள்ளார். 

நாட்டின் அபிவிருத்தியில் அவரின் பங்கு அளப்பரியது. இவரின் சிறந்த சேவையை நான் பாராட்டுகின்றேன் மேலும் கொழும்பு மாநகர சபையின் அபிவிருத்திக்காக இன்றைய தினம் 450 மில்லியம் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை பெற்று கொடுத்தமைக்கு எனது நன்றியை, மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கின்றேன்.

நான் 1961ஆம் ஆண்டினை நினைத்து பார்க்கின்றேன். இப்போது கொழும்புக்கு வருவதென்பது ஒரு கனவு போன்றது, 53 வருடங்களுக்கு முன்னர் நான் எனது சிறுவயதில் முதன் முதலில் கொழும்பு நகரத்திற்கு வருகை தந்த போது, பார்த்ததற்கும் இப்போது கொழும்பு நகரம் காணப்படும் நிலைக்கும் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.

அப்போது வாகனத்தில் செல்லும் சிலர் குப்பைகள் நிறைந்த பைகளை தெருவில் வீசிவிட்டு செல்வதை கண்டிருக்கின்றேன். ஆனால் இன்று அந்த நிலை இல்லை. கொழும்பு நகரம் அவ்வளவு தூய்மையாக உள்ளது. மக்களும் நகரின் தூய்மையை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்துகின்றனர். 

கொழும்பு இந்தளவுக்கு சிறப்பான நிலையை அடைய கோட்டாபயவின் அர்பணிப்பு மற்றும் சிறப்பான ஆற்றல் என்பனவே காரணம் என ஜனாதிபதி செயலாளர் மேலும் கூறினார்.

1 comment:

  1. பாவம் பெளதமக்களை ஏமாற்றி முஸ்லிம்கள் மீதும் இந்துக்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் புரளிகளையும் குழப்பங்களையும் உண்டாக்கி அவர்களின் கவனங்களை திசை திருப்பி, நாட்டின் சொத்துக்களையும் மக்களின் சொத்துக்களையும் சூறையாடுகின்றார்கள், பெளத்தர்களை பேசா மடந்தையாக்கி வைத்துள்ளார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.