Header Ads



பொதுபல சேனாவின் அச்சுறுத்தல் குறித்து, ஜனாதிபதியிடம் முஸ்லிம் கவுன்சில் முறைப்பாடு

பொதுபல சேனாவின் அச்சுறுத்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய மியன்மார் பௌத்த பிக்கு அஸின் விராதுவிற்கு வீசா வழங்கக் கூடாது என ஜனாதிபதியிடம் முஸ்லிம் பேரவை அண்மையில் கோரியிருந்தது.

இந்தக் கோரிக்கை தொடர்பில் கலபொடத்தே ஞானசார தேரர் முஸ்லிம் பேரவைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விராது தேரரை நாட்டுக்கு பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என முஸ்லிம் பேரவைக்கு கோரும் அதிகாரம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜுன் மாதம் அலுத்கம பேருவளை போன்ற இடங்களில் இடம்பெற்ற துர்ப்பாக்கியமான சம்பவங்கள் ஏற்பட பொதுபல சேனா போன்ற கடும்போக்குடைய இயக்கங்களே காரணம் என முஸ்லிம் பேரவை குறிப்பிட்டுள்ளது.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்குவாதிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

புனித குர் ஆன் தொடர்பில் ஞானசார தேரர் பிழையான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஏற்கனவே நீதிமன்றில் குற்றச்சாட்டு சுமத்தி வருவதாக முஸ்லிம்பேரவை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.