Header Ads



கோட்டாபய ராஜபக்ஸ, அரசியலுக்கு வருவதற்கு பூரண தகுதியை பெற்றுவிட்டார் - கொழும்பு மேயர் முஸாம்மில்

கோட்டாபய மிகவும் தூர நோக்கோடுதான் தனக்கு நகர அபிவிருத்தி அமைச்சு வேண்டுமென கூறியிருக்கின்றார். அவர் தற்போது அரசியலுக்கு வருவதற்கான மிக முக்கியமான தகுதியை பெற்றுவிட்டார் என கொழும்பு மாநகர மேயர் ஜே.எம் முஸாம்மில் தெரிவித்தார்.

450 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கொழும்பு மாநகரசபையிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இந்நிகழ்வு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில் புதன்கிழமை (10) மாலை இடம்பெற்றது. 

அவர் மேலும் கூறிகையில்,

ஜனாதிபதி செயலாளர் சிறந்த கதையொன்றை கூறினார். சிறந்த நகைச்சுவை ஒன்றை கூறினார். அது என்ன?. அதாவது கோட்டாபய தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லையெனவும் அதனால் நகர அபிவிருத்தி அமைச்சு தந்தால், நகரத்தை கொஞ்சம் அபிவிருத்தி செய்ய முடியும் என சொன்னதாக கூறினார்.

ஆனால் கோட்டாபய, மிகவும் தூர நோக்கோடுதான் தனக்கு நகர அபிவிருத்தி அமைச்சு வேண்டுமென கூறியிருக்கின்றார்.

எனக்கு இன்று ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது.1977ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன பிரதமராக இருந்த போது,  பிரேமதாச கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.

அது என்னவென்றால் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு துறைகளை தனக்கு தருமாறு அவர் கேட்டிருந்தார்.

இந்த இரண்டு துறைகளை மட்டுமே அவர் கேட்டார். ஏனென்றால் அதன் மூலமாகவே மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியும். யுத்தம் புரிவதனால் மட்டும் மக்களின் இதயத்தில் இடம்பிடித்துவிட முடியாது.

அதனால் கோட்டாபய அன்று கூறாமல் கூறியிருக்கிறார். நான் மக்களின் மனதில் இடம்பிடித்த பின்னர், அதாவது அரசியலுக்கு வருவதற்கான பூரணமான தகுதியை பெற்ற பின்னர் அதற்கு வருகிறேன் என்ற தகவலையே அன்று கூறியிருகிறார். கோட்டாபய இன்று அரசியலுக்கு வருவதற்கு பூரணமான தகுதியை பெற்றுவிட்டார் என முஸாம்மில் மேலும் கூறினார்.

முன்னதாக, இந்நிகழ்வில் உரையாற்றி ஜனாதிபதி செயலாளர்,கோட்டபாயவிடம் என்ன அமைச்சு வேண்டும் என ஜனாதிபதி கேட்டதற்கு அவர் தனக்கு அரசியலில் விருப்பம் இல்லை எனவும் நகர அபிவிருத்தி அமைச்சினை தந்தால் சிறப்பாக இருக்கும் என கூறியதாக சொன்னமை குறிப்பிடத்தக்கது. Tm

No comments

Powered by Blogger.