Header Ads



ஷரிஆ சட்டம் இறைவனின் சட்டமல்ல, இது சாத்தான்களின் சட்டம் - பொதுபல சேனா

இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளும் இஸ்லாமிய சட்டங்களும் நாட்டில் செயற்படுவது முஸ்லிம்கள் ஆயுதமேந்தி போராடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும். நாட்டில் முஸ்லிம் தீவிரவாதமொன்றினை உருவாக்கும் ஷரி - ஆ சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் பொதுபல சேனா பௌத்த அமைப்பு சிங்கள சமூகத்தை சீரழிக்கும் முஸ்லிம் மதவாதத்துக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் எனவும் சுட்டிக்காட்டியது.
பொதுபல சேனா பௌத்த அமைப்பினால் நேற்று கொழும்பு கிருலப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் பணிப்பாளர் டிலந்த விதாகே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
பொதுபல சேனா பௌத்த அமைப்பு வெறுமனே மதம் சார்ந்த அமைப்பு மட்டுமல்ல அதையும் தாண்டி சமூகத்தின் நலனுக்காக குரல்கொடுக்கும் அமைப்பாகவும் செயற்படுகின்றது. இன்று இலங்கை முஸ்லிம் தீவிரவாத சூழ்ச்சியொன்றில் சிக்கியுள்ளது. அதிலிருந்து நாட்டையும் சிங்கள மக்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் பயங்கரவாதம்
உலகளாவிய ரீதியில் இன்று முஸ்லிம் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பியா ஒன்றிய நாடுகள் என்பன இன்று முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றன. மத்திய கிழக்கில் சிக்கியுள்ள அமெரிக்கர்களின் தலைகள் வெட்டப்படுகின்றன. முஸ்லிம் அல்லாதவர்கள் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்புகள், தலிபான், அல் - கொய்தா, ஹமாஸ் ஆகிய தீவிரவாத இயக்கங்கள் உலகில் முஸ்லிம் தேசத்தை உருவாக்கி இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். உயிர்ப் பலிகள், பெண்களை பணயக்கைதிகளாக வைத்து தமது தேவைகளை நிறைவேற்றுகின்றமை, கட்டாய மதமாற்று நடவடிக்கைகள் என்பன முஸ்லிம் சட்டங்களை அடிப்படையாக வைத்து செய்யப்படுகின்றன. இஸ்லாமிய தேசங்களில் வேண்டுமாயின் ஷரி - ஆ சட்டம் நடைமுறைப்படுத்தப்படட்டும். அங்கு இறைவனின் பெயரில் உயிர்ப் பலி நடக்கட்டும். ஆயினும் எமது நாட்டில் அவை அவசியமில்லை.
இலங்கைக்கு ஷரி - ஆ தேவையில்லை
இலங்கை பௌத்த சிங்கள நாடு. இங்கு பொதுச் சட்டம் ஒன்று இடம்பெறுகின்றது. சிவில் சட்டங்கள் மூவின மக்களுக்கும் ஏற்ற வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதை மீறி இலங்கைக்குள் இஸ்லாமிய ஷரி - ஆ சட்டத்தை செயற்படுத்துவது ஒரு போதிலும் அனுமதிக்க முடியாது. இலங்கையில் ஷரி - ஆ சட்டத்தின் மூலம் நாட்டினுள் முஸ்லிம் பயங்கரவாதமொன்றை உருவாக்க முயற்சிக்கின்றனர். மத்தியகிழக்கு முஸ்லிம் நாடுகளில் உள்ள இஸ்லாமிய சட்டங்கள் இலங்கைக்குள் செயற்பட்டு இஸ்லாமிய கொள்கைகளைப் பரப்பி இலங்கையில் சிங்கள சமூகமொன்று இருந்த தடயத்தை அழிக்கும் சூழ்ச்சியை இப்போதே தடுக்க வேண்டும். எனவே, உடனடியாக ஷரி - ஆ சட்டத்தை நீக்கி முஸ்லிம் தீவிரவாதத்தினை தடுக்க வேண்டும். ஷரி - ஆ என்ற பெயரில் மனித உயிர்களை பறிக்கும் மோசமான கலாசாரம் பரவுகின்றது.
கடவுள் ஒரு போதும் உயிர் பலியை ஏற்கவில்லை. எனினும் இவர்கள் இறைவனின் பெயரில் இரத்த வாடையை அனுபவிக்கிறார்கள். ஷரி - ஆ சட்டம் இறைவனின் சட்டமல்ல. இது சாத்தான்களின் சட்டம். சாத்தான்களின் சட்டத்தை இலங்கையில் அனுமதிக்க இடமளிக்கக் கூடாது.
முஸ்லிம்கள் ஆயுதமேந்துவர்
இலங்கையில் இன்று 10 சதவீதமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களின் மத்தியில் தீவிரவாதக் கொள்கைகள் பரப்பப்பட்டாலும் சனத்தொகை சதவீதம் குறைவாக இருப்பதனால் பூனைகள் போல் அமைதியாக பதுங்கியுள்ளனர். எனினும் முஸ்லிம்களின் சனத்தொகை 20 சதவீதமாக உயரும் போது தீவிரவாத கொள்கைகளுக்காக இவர்களும் ஆயுதமேந்தும் நிலை உருவாகும். இது அப்பாவி முஸ்லிம் சமூகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும். கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் நாட்டில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியது. எனினும் புலிகளை விடவும் பயங்கரமான இஸ்லாமிய பயங்கரவாதம் உருவாக முன்னர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கிழக்கு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் ஷரி - ஆ சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகம் வழி நடத்தப்படுகின்றது. இது நாட்டில் பிரிவினை கொள்கைகளை உருவாக்கி முஸ்லிம்களை தவறானதொரு கொள்கைக்குள் இட்டுச்செல்கின்றது. அதேபோல் மதரஸாக்களிலும் ஷரி - ஆ சட்டங்களை கற்பித்து முஸ்லிம் சமூத்தை தீவிரவாதிகளாக மாற்றுகின்றனர். உலகளாவிய ரீதியில் 20 சதவீதமான மதரஸாக்களில் ஆயுதப்பயிற்சி வழங்கப்படுகின்றதென உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கின்றது. அதே நிலைமை இன்று இலங்கையிலும் ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது.
தேர்தலுக்கு முன்னர் நடவடிக்கை
எனவே ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் ஷரி - ஆ சட்டத்தை உடனடியாக நீக்கக் கோரி பிரசார செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம். அதேபோல் ஜனாதிபதி முறைமையை நீக்க முன்னர் முஸ்லிம்களின் ஷரிஆ சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும். நாட்டின் இப்போதைய பிரச்சினை எதுவோ அதையே முதலில் தீர்க்க வேண்டும். முஸ்லிம்களின் ஷரி - ஆ சட்டத்தின்படி போர்வீரர்களின் தேவைகளுக்காக பெண்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.
போர் வீரர்களின் காமத்தை தீர்ப்பதற்காக பெண்களை பணயம் வைப்பது தவறில்லை எனச் சொல்வது சரியாயின் இலங்கையில் முஸ்லிம் ஆக்கிரமிப்பு ஒன்று இடம்பெறுமாயின் சிங்களப் பெண்களே பலியாவார்கள். எனவே, நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் இருந்து தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

3 comments:

  1. பொது பலசேன பெளத்த அமைப்பு என்று சொல்வது தவறு. உண்மையில் நாட்டுக்கு துரோகம் செய்வதில் இன்று முன்னணியாக நிற்பது பொதுபலசேனக்கள்தான். நீங்க என்னதான் தொண்டை கிழிய கத்தினாலும் ஒன்றும் வேலைக்காகாது. ஒங்கட வேலையெல்லாம் அளுத்கம பிரச்சினையோட முடிந்துவிட்டது, அதுவும் பொட்டைத்தனமான் வேலை. இஸ்லாத்தை பற்றி பேச நீயெல்லாம் யாரட? பரதேசி.

    ReplyDelete
  2. எங்கே ACJU, SLTJ, நமது முதுகெலும்பில்லாத சட்டத்தரனிகள்? இவனுக்கு எதிராக மத நிந்தனை வழக்கு போடுங்கள்.

    ReplyDelete
  3. saatththaan can not talk about the Sheria law, I do not know why we do we worry about these Saaththaan PBS,

    When Abraha King came with his military to demolish the Kaaba, We o not know what Abdul Mutalib uncle of Prophet told them?

    Please release my camels , Kaaba is HOUSE of almighty Allah, the owner will take care, This is a very good example for us, Same Sheria law is the law of Allah, He knows how to protect Islam and and his law. let us ask dua for these monks to understand Islam and Sheria.

    ReplyDelete

Powered by Blogger.