Header Ads



450 மில்லியன் ரூபாய்களை சுருட்டிய அமைச்சர் - லஞ்ச ஊழல் ஒழிப்பு பணிப்பாளரை வீட்டுக்கு அனுப்பினார்

ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் 450 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து விசாரணைகளுக்கு முகம் கொடுக்காது, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளரை அமைச்சர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

நாட்டின் சட்டம் ஒழுங்கு பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது. 17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்தப்பட வேண்டும். நாட்டின் சகல சட்டங்களும் அரச நிறுவனங்களும் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 17ம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றின் 225 பேரில் 224 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

1 comment:

  1. இது உண்மையாக இருப்பின். தமிழ் நாட்டில் ஜெயலலிதா அம்மையாருக்கு நடந்த்து போன்று நமது நாட்டிலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். அதன் பிரகாரம் தண்டனையில் இருந்து அவர்கள் தப்பிக்கக்கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.