Header Ads



தொழுது கொண்டிருந்த போது, பள்ளிவாசல் இடிந்து விழுந்து 12 பேர் மரணம்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் 09-09-2014 மசூதி இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பலியாகினர்.

இரண்டடுக்கு கட்டிடமான அந்த மசூதிக்குள் சுமார் 50 பேர் இன்று பகல் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, மசூதியின் ‘மினாரா’ (கூம்பு வடிவ கோபுரம்) சரிந்து தளத்தின் மீது விழுந்தது.

மினாரா விழுந்த வேகத்தில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்துவரும் கன மழையால் ஊறிப்போய் இருந்த மசூதியின் தளம் மினாராவுடன் சேர்ந்து இடிந்து கீழே விழுந்தது. இதில் மசூதியின் உள்ளே தொழுதுக் கொண்டிருந்த அனைவரும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.

இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பிரேதங்களை வெளியே எடுத்துள்ள மீட்புப் படையினர், காயமடைந்த 11 பேரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. எஞ்சியுள்ளோரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

பாகிஸ்தானை தாக்கியுள்ள மழை வெள்ளம் லாகூர் நகரையும் பெருமளவில் பாதித்துள்ளதால், பழைமையான கட்டிடங்களில் வசிப்பவர்கள், தற்காலிகமாக  பாதுகாப்பான பகுதிக்கு சென்று தங்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.