நிர்வாணமாக வரச்சொன்னாலும், உங்களுக்கே வாக்களிப்போம்..!
நாங்கள் எங்களை
முஸ்லிம்கள் என்கிறோம்
ஆனால் -
எங்களுக்கு
எங்கள் சமூக உணர்வுகள்
என்றால் என்னவென்று
இது வரைத் தெரியாது!
உணர்வுகள் இழந்த
ஊணங்கள், நடைப் பிணங்கள்!
பிரிவினையிலும்
கருத்து வேற்றுமையிலும்
கண்ணுங் கருத்துமானவர்கள்,
காட்டிக் கொடுப்பதிலும்
கூட்டிக் கொடுப்பதிலும்
கண்ணியம் தேடுபவர்கள்!
பச்சை, நீலம் என்ற
கட்சி வெறிகளை
எமது உள்ளங்களில்
பச்சை குத்தியவர்கள்!
பிச்சை எடுத்தாலும், எம்மைப்
பிச்செடுத்தாலும்
இது எமது அக்கீதா!
பள்ளிகளைத் தகருங்கள்,
எல்லிககையாடுங்கள்
எமது உயிரிலும் மேலான
அபாயாக்கள், நிகாப்களைப் பற்றி –
அல்லது,
அல்லாஹ் என்ற வார்த்தையை
கொடும்பாவி எரியுங்கள்!
கடும் பாவிகளான எமக்கு
அதெல்லாம் சுரணையற்றவை!
பயங்கரப் புயலின் போது கூட
பாதுகாப்புடனும் பர்தாவுடனும்
எம் பாவையர்கள்
தேர்தல்களில் வாக்களித்தனர்,
ஆனால் இன்றைய துவேசத்தால்
தேர்தல் ஆனையாளர்
ஆனையிடுகிறார் -
பெண்கள் வாக்களிப்பதாயின்
முழுமையாகவோ,
அறைகுறையாகவோ
பர்தா, நிகாப் அணியக் கூடாதென்று!
சத்தியமாகச் சொல்கிறோம்,
வாக்குறுதியளிக்கின்றோம்,
நிர்வாணமாக வரச்சொன்னாலும்
உங்களுக்கே வாக்களிப்போம்!!

ஏன் என்றால் என் வறுமானத்தை-
ReplyDeleteமுடக்க விரும்பவில்லை
இவா்களை விட்டு நகர்ந்தால்
என் பழைய பயில்கள் புரட்டப்படுமடா..
ஆக மெோத்தத்தில் என்னால் பிறிய முடியாதட
ரோசம்கேட்ட சோனிகளே....