Header Ads



அகலல்ல ஆதவன்..!


அத்தனை தேரரும் சும்மா இருக்க
அந்தகன் போலாடும்  பொல்லா இந்த
அத்தன தேரருக்கு வந்ததேன் இப்போ
இத்தனை கடுப்பு இஸ்லாம் மீது !

பேரிலே மட்டும் ஞானம் சார்வார்
பெயரளவிலாவது ஞானம் சாரார்
பெருமைகள் பூத்த புத்தம் இவரால்
பெரும் சேதாரமாகுது  யாரும் பாரார் !!

சத்தமாய் பொய்கள் சளையா துரைத்தே
சகோதரன் மனதை அம்பாய்  துளைத்தே
சகவாழ்வின் சாரத்தை அடியோடழித்தே
சதிகாரர் ஆட்டிடும் பொம்மை ஆனார் !!!

கால்வாரும் சூழ்ச்சியை  கடனாய்ச் செய்யும்
கயவர்கள் கூட்டத்தின் கையில் ஆடும்
காசுக்கு விலைபோன எட்டப்பர் நம்
தேசத்தை மீட்சிபெற விடவேமாட்டார் !!!!

அகிம்சைவழி ஏந்தி நிற்கும் அண்ணன்மாரை
அரசியலின் சூழ்ச்சிப் பொறி ஆட்படுத்தி
தம்பியரின் வாழ்வுரிமை மறுத்துரைக்கும்
தரம்கெட்ட குணம் கொண்டா ராக்குவதோ ?

ஆதி நபி ஆதம்முதல் லங்காதேசம்
அமைதிவழி வாழ்ந்துவரும் சுதேசி எங்கள்
ஆதியந்தம் புரியாமல் திரிபு பேசி
அக்கிரமம் புரிந்தால் சொல் எழுமாதேசம்.?

பல்லிபோல் கூப்பாடு போடும் இந்த
படுபாவி சொல்லிலே சீக்கரம்  அணைந்துபோக
பன்சலை ஏற்றிடும் விளக்கா இஸ்லாம்
பார் ஒளி ஏற்றிடும்  ஆதவனாகும் !!!!

கவிஞர் காத்தூரி 

No comments

Powered by Blogger.