Header Ads



இளமையை தக்கவைக்க உயிரை பலி கொடுத்த டாக்டர்..!

இளமையை தக்க வைத்து கொள்வதற்கான ஊசி மருந்தை செலுத்திய பம்பலப்பிட்டி அழகு சாதன சிகிச்சை நிலைய உரிமையாளர் மருத்துவர் நிமல் கமகே என்ற வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறையினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கடை இலக்கம் நான்கு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இளமையை தக்க வைத்து கொள்வதற்கான ஊசி மருந்தை ஏற்றிய பின்னர் உயிரிழந்த மருத்துவர் தொடர்பாக காவற்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

47 வயதுடைய பீ.ஏ ப்ரியங்கி என்ற பெண் மருத்துவர், பம்பலப்பிட்டி விஷாகா வீதியில் அமைந்துள்ள தனியார் அழகு சாதன நிலையம் ஒன்றில் ஊசி மருந்தை ஏற்றிக் கொள்வதற்காக நேற்று மாலை அங்கு சென்றுள்ளார்.

இதன்போது, அவரது உடலுக்கு ஊசி மருந்து ஏற்றப்பட்டுள்ளதுடன், சிறிது நேரத்தின் பின் அவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு ரிச்வே சீமாட்டி சிறார் மருத்துவமனையின் பிளாஷ்டிக் சத்திரசிகிச்சை பிரிவின் விஷேட மருத்துவராக சேவையாற்றி வந்த மருத்துவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

No comments

Powered by Blogger.