வீரமரணமடைந்த தாயின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட காசாவின் குழந்தை வபாத்தானது..!
காசாவில் கொல்லப்பட்ட தாயின் கருப்பையில் இருந்து மீட்கப்பட்ட குறைப்பிரசவ குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்ட நிலையில் அங்கு நிலவும் மின்சார தட்டுப்பாடு காரணமாக இறந்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்து கடந்த ஜ{லை 25 ஆம் திகதி குறித்த குழந்தை உயிருடன் மீட்கப்பட் டிருந்தது.
23 வயதான 'ய்மா அல் i'க் என்ற குறித்த தாய் கொல்லப்படும் போது அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். மத்திய காசாவில் இருக்கும் டைர் பலாஹ் மருத்துவ மனையில் வைத்து மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு i'மா n'ய்க் அல் ஈத் என பெயர்சூட்டப்பட்டது.
தனது தாய் இறந்ததால் ஒட்சிசன் இல்லாமல் மூச்சுத்திணறிய குழந்தை தெற்கு காசாவில் இருக்கும் கான் யு+னிஸ் மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்தது.
"எதிர்பாராத முறையில் தாயின் இதயத்துடிப்பு நின்றதால் குழந்தை ஒட்சிசன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டது" என்று நாஸர் மருத்துவம னையின் குழந்தைகள் பிரிவு மருத் துவர் அப்தல் கராம் அல் பவாப் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். 'மூச்சுத் திணறலால் மூளை இறப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தற்போதைய மின்சார தட்டுப்பாடும் அதிக பங்கு வகித் துள்ளது. குழந்தையின் ஒட்சிசன் குழாய் ஒழுங்காக இயங்காதது காரணமாகும்" என அந்த மருத்து வர் விபரித்தார்.
காசாவில் இருக்கும் ஒரே மின்சார உற்பத்தி நிலையத்தையும் இஸ்ரேல் தாக்கி அழித்ததை அடுத்து அங்கு மின்சார தட்டுப்பாடு மேலும் உக்கிரமடைந் துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment