தவ்ஹீத் ஜமாத்தின் ஆர்பாட்டத்தை தடுத்துநிறுத்திய பொலிஸார்
காஸா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஏற்பாடு செய்த ஆர்பாட்டம் இன்று 13-08-2014 பகல் தொடங்கியது
ஆர்பாட்டம் மாளிகாவத்தை சிறீலங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமை காரியாலயம் முன்பாக ஆரம்பமாகியது. இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்பாட்டத்தை மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்துடன் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அதே இடத்தில் மேடை ஒன்றை அமைத்த ஆர்பாட்ட ஏற்பாட்டாளர்கள் அங்கு உரைகளை நிகழ்த்தினர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தப் போவதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்திருந்த போதிலும் அந்த அமைப்பு இன்று எந்த பேரணியையும் நடத்தவில்லை.
கொழும்பு கோட்டை, புறக்கோட்டை பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை இந்த அமைப்புகள் நடத்த உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து புறக்கோட்டை பொலிஸார் அது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.
இதனை கவனத்தில் எடுத்து கொண்ட நீதிமன்றம் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்த தடைவிதித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன நேற்று தெரிவித்திருந்தார்.

.jpg)
Post a Comment