பள்ளிவாசல்களுக்கு இன்று பாதுகாப்பு கிடைத்துள்ளது - ஜனாதிபதி மஹிந்த
பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி அசல பெரஹரா நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படுவதாக போலிப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இதில் எவ்வித உண்மையும் கிடையாது. சட்டமொன்று பற்றி தெரியாவிட்டால் அது பற்றி பேசாமல் இருப்பதே முக்கியம்.
சட்டமொன்று பற்றி தெரியாமல் அது குறித்து பேசி பிழையான கருதுகோள்களை உருவாக்கக் கூடாது. வலுவான ஓர் செயற்திட்டத்தின் மூலம் பௌத்த மதத்தை உலகிற்கு எடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மத நல்லிணக்கத்தைப் போன்றே மத மேம்பாட்டுக்காகவும் அரசாங்கம் பாரியளவில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தலதா மாளிகையை பாதுகாத்துக் கொள்ள முடியாத யுகமொன்று நாட்டில் இருந்தது. பௌத்த மதத்திற்கு மட்டுமன்றி கோவில், பள்ளிவாசல், தேவாலயங்களுக்கும் இன்று பாதுகாப்பு கிடைத்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Gnana sara rukku pathil sollukiraapola? boudda mathaththa pathukappathu entru.awarra perakoofa solls iwarukku payam pallikal pathu kaakka padutham enke saudi pontra arab naattila?
ReplyDeleteGnana sara rukku pathil sollukiraapola? boudda mathaththa pathukappathu entru.awarra perakoofa solls iwarukku payam pallikal pathu kaakka padutham enke saudi pontra arab naattila?
ReplyDeleteஉங்களோடு இருக்கும் அருவருடிகளான - றஊப் ஹகீம், ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், அதாஉல்லாஹ், ஹஜ் வணிகர்-பௌசி, அருவருடித்தலைவர்-அஸ்வர் முதலானோருக்கும் - இந்த மானிடக்குப்பைகளின் அடியாட்களுக்கும்.. அறிந்தும் அறிவின்றி அண்டியிருப்பவர்களுக்கும்..... இதைக் கூறுங்கள்!
ReplyDeleteஉண்மைதான் பள்ளிவாசல்கள் பாதுகாப்புடன்தான் உடைக்கப்படுகின்றன்.
ReplyDeleteதற்போது நாட்டு மக்கள் குற்றச்செயலில் ஈடுபடவில்லை. அனைத்தும் இராணுவம், பொலிஸ், மற்றும் பொய்யான தேரர்கள் மற்றும் பொறுப்பிலுள்ள அரசியல்வாதிகள் இவர்கள்தான் கொலை!! கொள்ளை!!! கற்பழிப்பு!!! ஆட்கடத்தல்!!! போதைப்பொருட்கள் இறக்குமதி!! பயங்கரவாதச்செயல்!!! போன்ற அனைத்து சட்டவிரோதமான செயல்களிலும் ஈடுபடுகின்றார்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இக்காரியங்கள் வேறு எந்த அரசாங்கத்திலும் இந்தளவு மோசமாக நடந்ததாக வரலாறுகள் சொல்லவில்லையே இதற்குப்பதில் என்ன???