Header Ads



ஆளும் கட்சியை விட்டு விலகினால், அசாத் சாலிக்கு நேர்ந்த கதியே எனக்கும் நேரிடும் - ரவூப் ஹக்கீம்

ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் சில முரண்பாடுகள் நிலவி வருவதாகவும், சிலவற்றுக்கு அவசரமாக தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் கட்சியை விட்டு விலகினால், அசாத் சாலிக்கு நேர்ந்த கதியே தமக்கும் நேரிடும் எனவும், தேசிய அரசியல் நீரோட்டத்தை விட்டு விலகியிருக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சி அங்கம் வகித்துக் கொண்டே அழுத்தம் கொடுக்க உத்தேசித்திருப்பதாகவும் உள்ளிருந்து அழுத்தம் கொடுக்கும் ஓர் தரப்பாக செயற்படப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்தும் குரல் கொடுக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த நிலைப்பாடு குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பேருவளை அலுத்கம சம்பவங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டு கட்சி அரசாங்கத்தை விட்டு விலக வேண்டுமென கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதிக்கும் ஹக்கீமிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. gtn

3 comments:

  1. People are not a stupid to belive your deceptions time to time. Just show one example what you did for Muslim community? We are challenging you!

    Do you have any answer other than jumping party to part for perks and privillage, over a decades and set SL Muslim under the current worste situation.

    Stop givng oxigen to the MR & Co, get loss as soon as possible. You dont have any moral rights to do politic on behalf of Muslims.

    SL Muslim be alert against this Moran.

    ReplyDelete
  2. Rendum ore kuttayil naariya mattaizaane...neengal anfavippeerhal.. neengal ungalukku seyza paavathai allaah mannippaan.... muslim samuzaayathukku seyza paavathai mannikka maattan. ..indha samuzaayam manazaal mannikkumvarai...jailukku poha payamaha irukkaa. ...uppu thindavan thanni kudippaan. ..matrazu solla venuma.... allaahvidam thauba seyyungal... allaah nam mun seyza paavangalai mannippaanaaha.... aameen. ...

    ReplyDelete
  3. உம்மை போல் பலகினமான சூடு சுரணை அற்ற சுயநல தலைவரை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றதற்கு மிகவும் வருந்துகிறோம். இதற்கான பதிலை ஊவா மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் மக்கள் நிட்சயம் பதில் அளிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.