Header Ads



கல்முனை அஷ்ரப் வைத்தியாசாலை சர்ச்சை தொடருகிறது..!

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் ஊழியர்களால் இம்சைப்படுத்தப்படும் பொதுமக்களின் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு தராதரம் இன்றி தண்டனை வழங்கப்படும் என்று மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. A.L.M  நஸீர் அவர்கள் அண்மையில் இணையத்தளம் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்.

இந்த அறிக்கை சம்மந்தமாக கல்முனை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது பிரித்தானியாவில் வசித்து வரும் பொறியியலாளர் யு.சு. றிசாத் ரூமி என்பவர் தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் பின்வரும் கருத்துக்களை எமது இணையத்தளத்திற்கு வழங்கியிருக்கிறார்.

இவர்  இலங்கையில் பொறியியலாளராக கடமையாற்றிய கால கட்டத்தில் சர்வதேச சிறுவர் நிதியத்தின் ((CCF/Child Fund) திட்டமிடல் அதிகாரியாக பணி புரிந்த போது இலங்iயின் சுகாதார திணைக்களத்தினுடனும் அஷ்ரப் வைத்தியசாலையுடனும் ஆக்கபூர்வ தொடர்புகளை ஏற்படுத்தி வைத்தியசாலையின் அபிவிருத்தியில் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றி உள்ளவர்.

ரூபா எட்டுக் கோடி பெறுமதியான பணத்தை இவ்வைத்தியசாலையின் 'சிறுவர் பிரிவு வைத்திய கட்டிட' (Pநனயைவசiஉ றுயசன) நிர்மாணத்திற்காக ஜேர்மன் நாட்டில் இருந்து தருவித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினை அவர் தொடர்பு கொண்ட போது  அஷ்ரப் வைத்தியசாலையில் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட அப்பிராந்திய பயனாளிகளுக்கு எவ்வித அசௌகரியுமும் இல்லாமல் சேவை வழங்குவதாக அப்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் கைச்சாத்திட்டு உறுதிப்படுத்தி இருந்ததை பொறியிலாளர் றிசாத் ரூமி இச்சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்டினார். 

தற்போது பிரித்தானியாவில் வசிக்கும் றிசாத் ரூமி கடந்த மே மாதம் தனது விடுமுறையினை கழிப்பதற்காக தாய் நாடான இலங்கைக்கு வந்திருந்த போது திடிர் சுகயீனமுற்ற தனது உம்மம்மாவை வைத்திய சிகிச்சை பெறுவதற்காக இவ் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார். அப்போது அங்கு சேவையில் இருந்த சிற்றூழியர் ஒருவர் மனிதாபிமானமற்ற  முறையில் வேண்டா வெறுப்புடன் செயற்பட்டதோடு றிசாத் ரூமியிடம் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசி அராஜகமாக நடந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அங்கு அப்போது சேவையில் இருந்த வைத்தியர் இவர் கொண்டு சென்றிருந்த நோயாளியை நீண்ட நேரமாக பரிசோதனை செய்ய முன் வராது அலட்சியமாக இருந்துள்ளார். இதை கண்ணுற்ற றிசாத் ரூமி மயக்க நிலையில் இருந்த நோயாளியை நிலமை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு அந்த வைத்தியரிடம் விசாரித்த போது  அவ் வைத்தியர் 'நோயாளி பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தான் யூகிப்பதாகவும் இன்னும் தான் நேயாளியை பார்க்கவில்லை என்றும் அலட்சியமான பதிலை சாதாரணமாக கூறியுள்ளார். 

இந்நிகழ்வுகள் தனக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாலும் இவ்வைத்தியசாலையின் புனித சேவைகள் இவ்வாறு தரம் கெட்டுப் போவதை சீர் செய்ய வேண்டும் என்ற நன்நோக்கத்திலும் இக்குறைபாடுகளை வைத்திய அத்தியட்சகர் அவர்களுக்கு சுட்டிக்காட்டி முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை எழுதி நேரிடியாக வைத்தியசாலையில் கையளித்துள்ளதாக றிசாத் ரூமி கூறினார். (அக்கடிதத்தின் பிரதி இங்கே தரப்பட்டுள்ளது.)

இக்கடிதம் கையளிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் இது சம்மந்தமாக எவ்வித விசாரணைகளோ நடவடிக்கைகளோ நடைபெற்றதாக தனக்கு தகவல் ஏதும் கிடையாததை அடுத்து கடிதம் கையளித்து சுமார் 45 நாட்களின் பின் றிசாத் ரூமி தனது முறைப்பாட்டிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்றும் அவ்வாறு நடவடிக்கை ஏதும் எடுத்திருந்தால் தனது சிறிலங்கா முகவரிக்கு அறிவிக்குமாறும் வேண்டி ஞாபகமூட்டல் கடிதம் ஒன்றை பிரித்தானியாவில் இருந்து தபாலில் அனுப்பியிருக்கிறார். இக்கடிதம் அனுப்பியும் எவ்வித பதிலும் இல்லாது ஆக மொத்தமாக 80 நாட்கள் கடந்த நிலையில் வைத்திய அத்தியட்சகர் நஸீர் அவர்கள் இவ் வைத்தியசாலை சம்மந்தப்பட்ட தனது கருத்தொன்றை இணையத்தளத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்ததை படித்து தான் அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார். அதாவது 'அஷ்ரப் வைத்தியசாலையின் நோயளிகள் அவமதிக்கப்பட்டால் விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் தராதரமின்றி தண்டிக்கப்படுவர்' என்றும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தனக்கு இதுவரை எவரும் முறைப்பாடு செய்யவில்லை' என்றும் இணையத்தளத்தில் கூறியிருக்கிறார். இக்கருத்து தனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு தனது முறைப்பாட்டுக் கடிதத்தினை அவர் திட்டமிட்டு அலட்சியப்படுத்தி இருக்கிறார் என்பது தெளிவாகிறது என்றும் றிசாத் ரூமி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.  

மேலும் றிசாத் ரூமி தனது கருத்தை வெளிப்படுத்துகையில் தற்போது இலங்கையில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் ஊழல்கள் அற்ற தரமான சேவையினை முன்னெடுத்துச் செல்லும் முகமாக திட்டமிட்டு பணிபுரியும் இலங்கை சுகாதார அமைச்சு எமது பகுதி மக்களின் கௌரவத்தையும் நோயாளிகளின் நலன்களையும் உறுதிப்படுத்தி புனித வைத்திய சேவையினை சீராக்கும் பொருட்டு தமது தீவிர கவனத்தை இவ்வைத்தியசாலையின் பக்கம் திருப்பும் என்பதில் தான் உறுதி கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

2 comments:

  1. நாங்க அப்படித்தான் சொல்லுவோம் அதெல்லாம் நம்பி கடிதம் நீதி நேர்மை இதெல்லாம் பேசி வரப்பொடாது, அது லண்டன் இது கல்முனை ...

    ReplyDelete
  2. நீங்க இப்படித்தான் சொல்லுவீங்க, பாதிக்கப்படுவது லண்டன் மக்களில்ல. கல்முனை மக்கள்தான். அந்த டாக்ட்ற மூஞ்சில ஒன்ற வழமா விட்டிருந்தா கடிதம் நீதி நேர்மை ஏன்ர அலைச்சளில்ல ??

    ReplyDelete

Powered by Blogger.