Header Ads



கட்சியை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பை என்னிடம் வழங்குங்கள் - ரணில்

முழு நாடும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் இந்த எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.  அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினரை அணி திரட்டி வேண்டும்.  எதிரான தரப்பினரை ஒன்று திரட்டினால் மட்டுமே எதிர்பார்த்த நோக்கத்தை அடைய முடியும்.

இளைஞர் யுவதிகள் மகிழ்ச்சி அடையக்கூடிய பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.  வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் குறைந்த பட்சம் ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்களை முதல் ஆண்டிலேயே வழங்குவோம்.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் மக்களை மறந்து பிழையான வழியில் சென்ற போது நான் மௌனம் காத்தேன்.  ஒரு சில காரணங்களுக்காகவே நான் அமைதியை பேணி வந்தேன். சில ஊடகங்கள் இது தொடர்பில் எனக்கு எதிராக சேறு பூசின.

மஹிந்தவை பொறியொன்றில் சிக்க வைக்கவே நான் அமைதி காத்தேன். குற்றங்களை சுட்டிக்காட்டியிருந்தால் அது திருத்திக் கொள்ளப்பட்டிருக்கும்.

கட்சியை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பை என்னிடம் வழங்குங்கள்,  நான் அதனை திறம்படச் செய்கின்றேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Nichayamaaha neengal katchiyai vetriferacheyveerhal....andha nambikkai enakkirrukku summaava america poy padithuvittu vandhavarallavaa neengal. ..aamaa sandhaanayathaane vetrifera cheyveenga.... podangoyyaala.... ada unp yil dhairiyamaaha pesuvazatku oru nermayaana arasiyalvaazi illayaa..... eppadi pesa mudiyum president evvalavu paazuhaappu koduthirukkiraar. ... sirikothavil paarthomilla.....allahzaan ezaavazu kirufai seyyanum....

    ReplyDelete

Powered by Blogger.