Header Ads



இலங்கையில் ''இபோலா நெமரிக்ஸ்'' குறித்து எச்சரிக்கை

மேற்கு ஆபிரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற இபோலா நெமரிக்ஸ் பீவர் எனப்படும் நோய் பரவல் குறித்து, இலங்கையில் உள்ள அனைத்து சுகாதார துறையினருக்கும் தெளிவுப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை தொற்றுநோய் தடுப்பு பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இபோலா எனப்படும் வைரஸினால் பரவும் இந்த நோய் தாக்கப்பட்டவர்களை எவ்வாறு பராமரிப்பது போன்ற விடயங்களில் சுகாதார அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளன.

1976ம் அண்டு கொங்கோவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்போது மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸின் தாக்கத்தினால் மேற்கு ஆபிரிக்காவில் இதுவரையில் 729 பேர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஷ் முதலில் சுவாசத் தொகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.பின்னர் சில தினங்களில் உடலில் உள்ள ஏனைய உறுப்புக்களில் பரவி, மரணிக்க செய்கிறது.

இந்த நோய் தாக்கியவர்களில் 90 சதவீதமானவர்கள் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த நோய் இன்னும் ஆசிய நாடுகளில் பரவி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத போதும், முன்னச்சரிக்கையாக இதனை தவிர்ப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.