Header Ads



பொத்துவில் கடலலை நீர்ச்சறுக்கல் சாகச போட்டியில் கிழக்கு மாகாண அணி சம்பியன்


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

பொத்துவில் அறுகம்பை 2014 ஆம் ஆண்டுக்கான கடலலை நீர்ச்சறுக்கல் சாகச சம்பியன் போட்டியில் கிழக்கு மாகாண அணி சம்பியானது. பொத்துவில் அறுகம்பையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.

ரெட்புள் றைட் மை வேவ் சம்பியன் கிண்ணத்திற்கான இச்சுற்றுப் போட்டியில் தென்மாகாண மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 22 போட்டியாளர்கள் பங்கு பற்றினர்.

இதன் போது 288 புள்ளிகளைப்பெற்று கிழக்கு மாகாண அணியினர் சம்பியனானதுடன், மாலைதீவில் இடம்பெறவுள்ள சர்வதேச போட்டியிலும் பங்கு பற்றறுவதற்கான  சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இப்போட்டியில் தென்மாகாண அணி 143 புள்ளிகளைகளைப் பெற்று 02ஆம் இடத்தைப் பெற்றது.

சுற்றுலாத்துறையின் சொர்க்க புரியாகத்திகழும் பொத்துவில் அறுகம்பை குடா சேர்பிங் விளையாட்டுக்கு உலகில் 10ஆவது இடத்தையும் தெற்காசியாவில் 03ஆவது இடத்தையும் பெற்று பிரபல்லியமடைந்த ஒரு இடமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை வெளிநாட்டு போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளாத போதிலும் இச்சுற்றுப் போட்டியை கண்டு கழிப்பதற்காக ஆயிரக் கணக்கான உள்ளுர் மற்றும் சர்வதேச சுற்றுலர் பயணிகள் வருகைதந்திருந்தனர்.

ரெட்புள் நிறுவனத்தின் அதியுயர் பயிற்றுவிப்பாளர் டியகோ நரஞ்சேவின் வழிகாட்டலின் கீழ் இச்சுற்றுப் போட்டி இடம்பெற்றதுடன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிரியாணி விஜயவிக்ரம வருகை தந்து நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார்.





No comments

Powered by Blogger.