Header Ads



பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பு அமெரிக்க தூதரகம் முன் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் (படங்கள்)

(Adt)

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக மக்கள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இதன்போது அமெரிக்கத் தூதுவரிடம் மகஜர் ஒன்றை கையளிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்பட்டனர். 

எனினும் இதற்கு அனுமதி வழங்கப்படாததால் தூதரக வாசலில் அதனை ஒட்டிவிட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதலைக் கண்டித்தும் இஸ்ரேல் மீது ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணையொன்றை நடாத்த வெண்டுமெனக் கோரியும் ஏறாவூர் பிரதேசத்தில் இன்று (08.08.2014) வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது. 

ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணி, ஏறாவூர் முகைதீன் ஜும் ஆப் பள்ளிவாயல் முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஏறாவூர் நகர சபைக்கு முன்பாக நிறைவு பெற்றது. 


No comments

Powered by Blogger.