Header Ads



''முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படும் அபாயம்'' - 'ஜனாதிபதி இழைத்த பாரிய தவறு'

(Gtn)

முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சிரேஸ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் இயங்கி வரும் கடும்போக்குவாத அமைப்புக்களினால் இ;வ்வாறான ஓர் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கைக்கு நட்பாக செயற்பட்டு வந்த முஸ்லிம் நாடுகள் மத்தியில் சந்தேகத்தை தோற்றுவிக்கும் வகையில் கடும்போக்குவாத அமைப்புக்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீனத்திற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குரல் கொடுத்த காரணத்தினால் முஸ்லிம் நாடுகள் மத்தியில் ஜனாதிபதிக்கு சிறந்த நன்மதிப்பு காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் கடும்போக்குவாத சக்திகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உரிய முனைப்பு காட்டாமை ஜனாதிபதி இழைத்த பாரிய தவறாகவே கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை அரசியல் கட்சிகள் ஒரே தளத்தில் ஒன்றிணைந்து செயற்பட ஆர்வம் காட்டி வருவதாகவும், இவ்வாறான் சூழ்நிலைக்கு கடும்போக்குடைய சக்திகளே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நாட்டின் அரசியலில் தேவையற்ற வகையில் முக்கியத்துவம் பெறுவதற்கு கடும்போக்குடைய சக்திகளே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரங்களில் சில திருத்தங்களுடன், ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்க வேண்டியது அவசியமானது என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. முன்பெல்லாம் இவர் அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக்காட்டினார், இப்போதெல்லாம் இவர் பாணியில் ஒரு வித்தியாசமான வாடை தெரிகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.